twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்'... மணிரத்னம் பர்த்டே ஸ்பெஷல்

    By Manjula
    |

    சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இன்று தனது 61 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார்.

    மவுனராகம், தளபதி, நாயகன், அஞ்சலி, அக்னி நட்சத்திரம், ரோஜா, அலைபாயுதே, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மணி போன்ற காலத்தால் அழியாத படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் என்று பெயரெடுத்தவர்.

    பிறந்தநாளில் மணிரத்னம் குறித்த சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

    மணிரத்னம்

    மணிரத்னம்

    சுப்பிரமணி என்ற இயற்பெயரிலிருந்து மணியையும் அப்பாவின் ரத்னம் என்ற பெயரையும் இணைத்து மணிரத்னம் என்று பெயர் வைத்துக் கொண்டார். எம்பிஏ முடித்து விட்டு டிவிஎஸ் கம்பெனியில் சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார்.

    அனு பல்லவி

    அனு பல்லவி

    யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் நேரடியாகப் படமெடுத்தவர். இவர் இயக்கிய முதல் படம் பல்லவி அனு பல்லவி. இப்படத்தைத் தயாரிக்க யாரும் முன்வராததால் இவரின் பெரியப்பா வீனஸ் கோவிந்தராஜே தயாரிப்பாளராக மாறி இப்படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

    பகல் நிலவு

    பகல் நிலவு

    முதலிரண்டு படங்களும் ஓடாததால் முரளி-ரேவதியின் பகல் நிலவு படத்தை முழுக்கவே கமர்ஷியல் படமாக உருவாக்கினார். கமர்ஷியலில் பயணித்தாலும் பம்பாய், ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் மதம், தீவிரவாதம், இலங்கைப் படுகொலை போன்றவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கத் தயங்கியதில்லை.

    தமிழ்

    தமிழ்

    பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசுவார். ஆனால் தான் இயக்கும் படங்களில் தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார். நிஜ வாழ்வில் சுருக்கமாக பேசும் இவரை, இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்களின் கதாபாத்திரம் பிரதிபலிக்கும்.

    செண்டிமெண்ட்

    செண்டிமெண்ட்

    இன்று செண்டிமெண்டை நம்பாமல் இறுதிச்சுற்று, தனி ஒருவன், பிச்சைக்காரன் என்று படங்கள் வைத்து அதில் வெற்றியும் பெறுகின்றனர். ஆனால் 30 வருடங்களுக்கு முன்பே செண்டிமெண்ட் மீது நம்பிக்கை இல்லாமல் அக்னி நட்சத்திரம் என்று பெயர் வைத்து அதில் வெற்றி கண்டவர் மணிரத்னம்.

    மேலும் பட பூஜை, ராகு காலம், எமகண்டம், நல்ல நேரம் போன்றவற்றை நம்பாமல் தன் உழைப்பை மட்டுமே நம்புபவர்.

    மழை, ரயில்

    மழை, ரயில்

    மணிரத்னம் படங்களில் மழை, ரயில் பயணம், பேருந்து பயணம் ஆகியவை கண்டிப்பாக இருக்கும். அதுபோல உடை விஷயங்களில் எப்போதும் சிம்பிள் தான் எந்தப் பந்தாவும் காட்ட மாட்டார்.

    பி.சி.ஸ்ரீராம்

    பி.சி.ஸ்ரீராம்

    நெருங்கிய நண்பர்களில் பி.சி.ஸ்ரீராமுக்கு முக்கிய இடமுண்டு. சந்தோஷ் சிவன், ராஜீவ் மேனன் போன்றவர்களுடன் பணியாற்றினாலும் பி.சி.ஸ்ரீராமுடன் இணைந்து தான் நிறையப் படங்களில் பயணம் செய்திருக்கிறார்.

    இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான்

    இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான்

    இசையமைப்பாளர்களை அடிக்கடி மாற்றுவது பிடிக்காது. இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுக்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மானுடன் மட்டுமே பயணித்து வருகிறார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவரை ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மணிரத்னம் சார்...

    English summary
    Today Director Mani Ratnam Celebrating His 61st Birthday. From thatsTamil and all our Readers around the world, wishing this marvelous Director a wonderful birthday ahead.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X