கடைசி வரை போராட சொல்லிக் கொடுத்த மனுஷன்யா அவரு.. நெல்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கவின்!

சென்னை: விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மட்டும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருந்தால் இன்னேரம் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஏகப்பட்ட பிரபலங்கள் இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்து சொல்லி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்திருப்பார்கள்.

ஆனால், ஒருமுறை சறுக்கியதும் ஒட்டுமொத்தமாக விஜய் ரசிகர்களே ஓரங்கட்டி விட்டு தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நெல்சனின் ஆருயிர் நண்பரான நடிகர் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் அசத்தலான பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை கூறியிருக்கிறார்.

நெல்சன் பிறந்தநாள்

நெல்சன் பிறந்தநாள்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக ஜூன் 21ம் தேதி பிறந்தவர் தான் இயக்குநர் நெல்சன். கடந்த ஆண்டு இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை விஜய் ரசிகர்கள் வேறலெவலில் கொண்டாடிய நிலையில், இந்த ஆண்டு சில உண்மையான ரசிகர்களை தவிர பலரும் கண்டு கொள்ளவில்லை. 1984ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி பிறந்த நெல்சன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள் தான் நெல்சனை கொண்டாட மறந்தாலும், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்கவுள்ள நெல்சனை ரஜினிகாந்த் ரசிகர்கள் ஏன் வாழ்த்து சொல்லி கொண்டாடவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. லைகா நிறுவனம், சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம், சன் பிக்சர்ஸ் உள்ளிட்டவை நெல்சனை வாழ்த்த தவறவில்லை.

கவின் வாழ்த்து

கவின் வாழ்த்து

விஜய் டிவியில் இருந்தே இயக்குநர் நெல்சனுக்கும் நடிகர் கவினுக்கும் இடையே நல்லதொரு பாண்டிங் உள்ளது. பீஸ்ட் படத்தின் பூஜைக்கும் நெல்சன் கலந்து கொண்டார். சமீபத்தில் துபாய்க்கு நெல்சன் டூர் சென்ற போதும் கவின் மற்றும் பிரியங்கா மோகன் உள்ளிட்ட பிரபலங்களும் உடன் சென்றிருந்தனர். இந்நிலையில், நெல்சன் பிறந்தநாளுக்கு கவின் பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமல் விட்டு விடுவாரா என்ன? தனியாக பார்ட்டியே சேர்ந்து கொண்டாட கிளம்பி இருப்பார்.

கடைசி வரை போராடுவார்

கடைசி வரை போராடுவார்

இயக்குநர் நெல்சனுக்கு எதிராக ஏகப்பட்ட ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வரும் நிலையில் பல சினிமா பிரபலங்களே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதை தவிர்த்துள்ளனர். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், " எனக்கு கன்சிஸ்டன்சியையும் என்ன நடந்தாலும் முயற்சியை விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை போராட வேண்டும் என சொல்லிக் கொடுத்த மனிதரின் பிறந்தநாள் இன்று" என கவின் ட்வீட் போட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Recommended Video

Thalapathy Birthday | விஜய் ரசிகர்கள் இரத்த தானம்... *Kollywood | Filmibeat Tamil
வெயிட்டா வருவாரு நெல்சன்

வெயிட்டா வருவாரு நெல்சன்

முன்னணி ஹீரோக்களின் படம் ஃபிளாப் ஆனால், அடுத்த படத்தில் ஹிட் கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருப்பதை போலவே இயக்குநர்களையும் நம்ப வேண்டும் என்கிற குரலும் எழுந்துள்ளது. ஜெயிலர் படத்தின் மூலம் வெயிட்டான கம்பேக் கொடுப்பார் நெல்சன் என பிலிமி பீட் தமிழ் சார்பாக அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X