Just In
Don't Miss!
- Automobiles
மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...
- News
மாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிறந்தநாள் கொண்டாடும் சந்தானம்.. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை: தமிழ் சினிமா நடிகரான சந்தானம் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நகைச்சுவை நடிகராக நடிக்க தொடங்கி பின்னர் ஹீரோ கதாபாத்திரத்திலும் நடிக்க தொடங்கினார்.
லயோலாவில் களைக்கட்டிய மயிலாட்டம்.. ஒயிலாட்டம்.. நாட்டுப்புற கலைகள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
பிறந்தநாள் கொண்டாடும் சந்தானத்திற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

கலாய் கிங்
தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சியில் நகைச்சுவையாளராக நடித்து பலரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார் சந்தானம். அதனின் விளைவாக நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்து நகைச்சுவை நடிகராக நடிக்க தொடங்கினார்.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களிலிருந்து வளர்ந்து வரும் நடிகர்கள் வரை படத்தில் சந்தானம் கலாய்க்காத ஆட்களே இல்லை.

டபுள் காம்போ
பின்னர் நகைச்சுவை நடிகருக்கான வாய்ப்பை ஒதுக்கி விட்டு முழுவதுமாக ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தற்போது ஹீரோ கதாபாத்திரத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். காமெடி - ஹீரோயிசம் என ரசிகர்களை மகிழ்விக்கும் டபுள் காம்போவாக தன்னுடைய பணிகளை சிறப்புற செய்து வருகிறார் சந்தானம்.

பாரிஸ் ஜெயராஜ்
சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நடிப்பில் வெளிவரவிருக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் இருந்து புலி மாங்கா புளிப் எனும் பாடல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் சமீபத்தில் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் முதல் பார்வை, ட்ரைலர், காவா உள்ள பாடல் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சபாபதி போஸ்டர்
இதை தொடர்ந்து ஆர். ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானத்தின் மற்றொரு படமான சபாபதி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைக்கிறார். இந்த வருடம் ஏப்ரல் மாதம் சபாபதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர்த்து பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சர்வர் சுந்தரம் என சந்தானம் நடிப்பில் படங்கள் ரிலீசுக்கு காத்துள்ளன.