»   »  பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லதுன்னு சொன்ன மகானே! 'ஹெச்.பி.டி.' கவுண்டமணி

பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லதுன்னு சொன்ன மகானே! 'ஹெச்.பி.டி.' கவுண்டமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் பிறந்தநாளையொட்டி #HappyBirthdayGoundamani என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் முதல் இடத்தில் டிரெண்டாகியுள்ளது.

சினிமாவில் எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணிக்கு என்று தனி இடம் உண்டு. அத்தகையவர் இன்று தனது 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஏராளமான ரசிகர்கள் கவுண்டமணிக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ட்விட்டரில் தேசிய அளவில் #HappyBirthdayGoundamani(பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவுண்டமணி) என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் இன்று காலை டிரெண்டாகியுள்ளது. கவுண்டமணிக்கு வாழ்த்து தெரிவித்து போடப்பட்டுள்ள சில ட்வீட்கள்,

பேப்பர் ரோஸ்ட்

பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லதுன்னு சொன்ன மஹானே!#HappyBirthdayGoundamani என ரவிக்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தொழில் அதிபர்

இந்த தொழிலதிபர் தொல்ல தாங்க முடியலப்பா! புண்ணாக்கு விக்கிறவனெல்லாம் தொழிலதிபராம் #HappyBirthdayGoundamani என ஹசீனா பானு கவுண்டணியை வாழ்த்தியுள்ளார்.

வாழ்த்து

கவுண்டர் மகான்,
தத்துவ தலைவனை வாழ்த்த வயதில்லை தலை வணங்குவோம்!
அனைத்து தலைமுறையாலும் ரசிக்கபட்ட மனிதன்!
#HappyBirthdayGoundamani என சிறுவன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோமேக்ஸ்

ஏம்மா பெட்ரொமேக்ஸ் லைட்டே வேணுமா? இந்த பந்தம் கிந்தம் எல்லாம் கொளுத்த மாட்டீங்களா? #HappybirthdayGoundamani என ராஜேஷ் வர்மா ட்வீட் செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவின் காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HappybirthdayGoundamani என்று ஏ.என்.ஓ. என்பவர் வாழ்த்தியுள்ளார்.

கவுண்ட்டர்

கவுண்ட்டர் கவுண்டருக்கு வாழ்த்துக்கள் #HappybirthdayGoundamani என்று அருண் பிரசாத் என்பவர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

English summary
Goundamani, the Great comedian of Tamil cinema is celebrating his birthday today. On this special day #HappyBirthdayGoundamani is trending on twitter.
Please Wait while comments are loading...