»   »  படம் முழுக்க டபுள் மீனிங்காதான் இருக்குமா? - 'ஹர ஹர மஹாதேவகி'யின் சில நிமிடக் காட்சிகள்!

படம் முழுக்க டபுள் மீனிங்காதான் இருக்குமா? - 'ஹர ஹர மஹாதேவகி'யின் சில நிமிடக் காட்சிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, மொட்டை ராஜேந்திரன், சதீஷ், கருணாகரன், பால சரவணன், மனோபாலா ஆகியோர் நடிக்கும் படம் 'ஹர ஹர மஹாதேவகி'. அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் நாளை வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், 'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் மூன்று நிமிடக் காட்சி வெளியிடப்பட்டிருக்கிறது. மூன்று நிமிடக் காட்சி முழுவதும் ஆபாச டபுள் மீனிங் வசனங்களாகவே இருக்கின்றன. படத்தின் டைட்டிலே ஆபாச ஒலிப்பதிவுகளை மையமாகக் கொண்டதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Hara Hara Mahadevaki Movie Sneak Peek - adult comedy

'முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிந்து நடனம், ஆபாசக்காட்சிகள் போன்ற எதுவுமே இப்படத்தில் கிடையாது. நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாகப் பேசிக்கொள்வது தான் இப்படத்தின் கதை. இப்படத்தை விருப்பமானவர்களோடு சந்தோஷமாக பார்க்கலாம்.

இப்படத்தின் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கவலையில்லை. இப்படத்தை பார்த்து மக்கள் கெட்டுப் போவார்கள் எனத் தோன்றவில்லை. இதில் கவுதம் புதுமையான தொழில் ஒன்றை செய்பவராக நடித்திருக்கிறார்.' எனக் கூறியிருக்கிறார் படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

English summary
'Hara Hara Mahadevaki' is an adult comedy film directed by Santhosh P Jayakumar, starring Gautham Karthik and Nikki Galrani in the lead roles. The three-minute sneak peek of 'Hara Hara Mahadevaki' is currently released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil