»   »  பிக் பாஸ் வீட்டில் தேம்பித் தேம்பி அழுத ஆர்த்தி

பிக் பாஸ் வீட்டில் தேம்பித் தேம்பி அழுத ஆர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆர்த்தி தேம்பித் தேம்பி அழுதுள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் மறுபடியும் சென்றுள்ளார் நடிகை ஆர்த்தி. முதல் முறை போன்று இல்லாமல் தற்போது அடக்கி வாசிக்கிறார். ஜூலியை பற்றிய உண்மை எல்லாம் புட்டு புட்டு வைக்கிறார்.

அவரின் இந்த செயல் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

அழுகை

அழுகை

பிக் பாஸ் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆர்த்தி மட்டும் எழுந்து அழுது கொண்டிருந்தார். அதை பார்த்த வையாபுரி அதிர்ச்சி அடைந்தார்.

அம்மா

அம்மா

ஆர்த்தி அம்மாவின் நினைவு நாளாம். நினைவு நாளுக்கு நான் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று அவர் தனது அப்பாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் மேலும் சில நாட்கள் தங்க வேண்டியதாகிவிட்டது.

கண்ணீர்

கண்ணீர்

அம்மா நினைவு நாளில் அப்பா தனியாக இருந்து ஃபீல் பண்ணுவாரே என்பதை நினைத்து ஆர்த்தி தேம்பித் தேம்பி அழுதார். அவருக்கு வையாபுரி ஆறுதல் கூறினார்.

பிந்து மாதவி

பிந்து மாதவி

விடிந்த பிறகும் ஆர்த்தி தனது தாயை நினைத்து அழுதார். அதை பார்த்த பிந்து மாதவி அவரிடமே விபரம் கேட்டு ஆறுதல் கூறினார். அம்மாவின் பிரிவை தாங்கவே முடியாது என்றார் பிந்து.

ஆர்த்தி

ஆர்த்தி

அம்மாவை நினைத்து கஷ்டமாக இருக்கிறது. அம்மா இறந்து 2 ஆண்டுகளாகிவிட்டது. நான் கொஞ்ச நேரம் அழுத பிறகு சரியாகிவிடுவேன் என்று ஆர்த்தி தெரிவித்தார்.

English summary
Actress Harathi cried last night thinking of her dad who is all alone at home on her mother's death anniversary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X