»   »  தம்பி ஓரமா போய் விளையாடு பா: விவேகம் ட்ரெய்லரை கலாய்த்தவருக்கு ஆர்த்தி பதிலடி

தம்பி ஓரமா போய் விளையாடு பா: விவேகம் ட்ரெய்லரை கலாய்த்தவருக்கு ஆர்த்தி பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் விவேகம் பட ட்ரெய்லரை 57 முறை பார்த்ததாகவும் படத்திற்கு ஆஸ்கர் கிடைக்கும் என்றும் நடிகை ஆரத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் அசர வைத்துள்ளது. ட்ரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன.

ட்ரெய்லரை பார்த்தவர்கள் படம் வேற லெவல் என்று கூறி வருகிறார்கள்.

ஆர்த்தி

57 முறை பார்த்தேன்...விஷுவல்ஸ் வேற வெவல்..படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது பெற தயாராகுங்கள்...பெருமைப்படும் ரசிகை என்று நடிகை ஆர்த்தி ட்வீட்டியுள்ளார்.

ஆஸ்கர்

இந்த ட்ரெய்லருக்கே கண்டிப்பா ஆஸ்கர் தருவாங்க மேடம்... கவலைப்படாதீங்க என்று ஒருவர் ஆர்த்தியின் ட்வீட்டை பார்த்துவிட்டு கிண்டலாக கமெண்ட் போட்டார்.

ஓரமா போ

கிண்டல் செய்தவருக்கு பதில் அளித்து ஆர்த்தி ட்வீட்டியிருப்பதாவது, தம்பி ஓரமா போய் விளையாடு பா...நாங்க யார்னு முடிவு பண்றது எங்க முன்னாடி இருக்குறவங்க தான்..இன்னும் நீங்க வளரணும் என்றார்.

பொய்

பொய் சொல்லாதீங்க..ரொம்ப போர் என்றவருக்கு ஆர்த்தி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, என்ன பயமா இருக்கா?? மெர்சலா இருக்கா??? கஷ்டம் தான் என்றார்.

English summary
Actress Harathi tweeted that, Watched 57times..thalaaaaaaa is treat to watch..Visuals Vera level..Best wishes to entire team,get ready 2 bag oscars..I'm Proudest fan SAI🙏'. She has watched Vivegam trailer 57 times.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil