»   »  மும்தாஜை மொத்த வீடும், கமலும் டார்கெட் செய்வதா?: ஆர்த்தி குமுறல்

மும்தாஜை மொத்த வீடும், கமலும் டார்கெட் செய்வதா?: ஆர்த்தி குமுறல்

By Siva
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் வாரா வாரம் மும்தாஜையே டார்கெட் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகை ஆர்த்தியும் அதையே தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் மும்தாஜ் எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக பேசிவிடுகிறார். சக போட்டியாளர்களுக்கு அழ வேண்டும் என்றால் மும்தாஜிடம் வந்து அழுது, ஆறுதல் பெறுகிறார்கள்.

மற்ற நேரத்தில் அவரை பற்றி தப்புத் தப்பாக பேசுகிறார்கள்.

மும்தாஜ்

மும்தாஜ்

ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகியோருக்கு அழ வேண்டுமானால் மும்தாஜ் மடி தேவைப்படுகிறது. மற்ற நேரத்தில் அவரை பற்றி மகத் உள்ளிட்டவர்களிடம் தவறாக பேசுகிறார்கள். மேலும் கமல் ஹாஸன் மும்தாஜையே டார்கெட் செய்வதாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதுவம் வாரா வாரம் டார்கெட் செய்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆர்த்தி

பிக் பாஸ் 2 பற்றி முன்னாள் போட்டியாளரான நடிகை ஆர்த்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மும்தாஜ் பிரார்த்தனை பண்றது ஐஸு மற்றும் மகத்துக்கு பயமா இருக்காம். பிரார்த்தனைக்கு எதுக்கு பயப்படணும்?? ஒரு லேடியை மொத்த வீடும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவரும் டார்கெட் செய்வதா? போறேன்னு சொல்கிறவங்களை போக விடாமல் கதவை லாக் பண்ணது தப்பு. ஐஸ் மற்றும் பாலாஜியை வெளியே அனுப்புங்க. கதவு திறந்ததை பார்த்ததும் பீதியாகிட்டாங்க என்று தெரிவித்துள்ளார்.

பேய்

பேய்

ஐஸ்வர்யா அவ்வப்போது பேய் மாதிரி கத்துவது எல்லாம் மகத் காதில் தேன் வந்து பாய்வது போல உள்ளது போன்று. மும்தாஜ் ஐஸ்வர்யா மாதிரி கத்திப் பேசியது மட்டும் மகத்திற்கு பேய் மாதிரி கத்துவதாக தெரிகிறதாம். மகத் உங்க பேச்சுக்கு பார்வையாளர்கள் மத்தியில் மதிப்பே கிடையாது என்பது வெளியே வந்த பிறகு தான் தெரியும்.

யாஷிகா

யாஷிகா

மும்தாஜ் எது கொடுத்தாலும் சாப்பிடாதே, அவர் கையால் தண்ணீர் கொடுத்தால் கூட குடிக்காதே என்று மகத் ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் தெரிவித்துள்ளார். அந்த மும்தாஜே ஏதோ சூனியக்காரி போன்று பேசுகிறார் மகத். மும்தாஜ் பிரார்த்தனை செய்தால் மகத்துக்கு ஏன் பயம் வரணும்? ஒருவர் பிரார்த்தனை செய்வதை பார்த்து மகத் ஏன் பயப்பட வேண்டும்?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Former Bigg Boss 2 Tamil contestant Harathi tweeted that, #mumtaz pray pandrathu #aishu & #mahath Bayama irukkaam🤔prayerkku edhukku bayapadanum?? Edhu bayapadum?? 😂😂 oru ladya whole house +host targets?!?!Poren soldravangalai poga vidama door lock pannadhu thappu send out aish&balaji😂😂door thorandhathu paarthavudan beedhiaitanga'

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more