ஹர்பஜன் சிங்கின் Friendship படப்பிடிப்பு முடிந்தது… டிரைலர் ரிலீஸ் எப்போ தெரியுமா !
சென்னை : ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா மரியனேசன், ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் இந்த மாதம் இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரண்ட்ஷிப்
சிறந்த சுழற்பந்த வீச்சாளரான ஹர்பஜன்சிங், Friendship என்ற ரொமாண்டிக் மற்றும் காமெடி கலந்த தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கதாநாயகன்
பிரண்ட்ஷிப் திரைப்படம் தமிழில் தயாரிக்கப்பட்டு இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதனால்தான் ஹர்பஜன் சிங் முழு நேர நடிகராகி விடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

படப்பிடிப்பு முடிந்தது
இந்நிலையில் ஹர்பஜன் சிங் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ளதை அடுத்து, டப்பிங் பணிகளை தொடக்க உள்ளார். இப்படத்தின் டிரைய்லர் இந்த மாதம் இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூகுள் குட்டப்பன்
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த இலங்கை செய்தி தொகுப்பாளர் லாஸ்லியா மரியனேசன், ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் , கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











