Just In
- 31 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 53 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 1 hr ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 1 hr ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- Lifestyle
நல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...!
- Finance
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர்.. இனி வேற லெவல் தான்..!
- News
கமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி!
- Sports
மேள தாளங்கள் முழங்க.. சாரட் வண்டியில் மிதந்தபடி வந்த நடராஜன்.. சின்னப்பம்பட்டி மக்கள் மாஸ் வரவேற்பு
- Automobiles
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மோகன் பகவத் ஒரு தீவிரவாதி, உ.பி. முதல்வர் காவி பலாத்காரவாதி: பாடகி விளாசல்
மும்பை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை பாடகி ஹர்த் கவுர் சமூக வலைதளத்தில் விளாசியுள்ளார்.
சமூக வலைதளத்தில் யாரையாவது வெளுத்து வாங்குவதற்கு பெயர் போனவர் பாடகி ஹர்த் கவுர். இந்நிலையில் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளாசியுள்ளார்.
மேலும் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பற்றியும் போஸ்ட் போட்டுள்ளார்.
யார் கிட்ட வேணும்னாலும் வச்சுக்கலாம் ஆனால் விஜய் ரசிகாஸிடம் மட்டும் கூடாது #Thalapathy63UpdateDay
ஆர்.எஸ்.எஸ்.
2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரேவை பற்றி எஸ்.எம். முஷ்ரிப் எழுதிய கர்கரேவை கொலை செய்தது யார் என்ற புத்தகத்தின் புகைப்படத்தை வெளியிட்டு ஆர்.எஸ்.எஸ். தான் செய்தது என்று பதில் அளித்துள்ளார் ஹர்த் கவுர். மேலும் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் கொலையாளிகளை சும்மாவிட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மோகன் பகவத்
26/11 தாக்குதல், புல்வாமா உள்பட இந்தியாவில் நடந்த அனைத்து தாக்குதல்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தான் பொறுப்பு. இந்தியாவில் உள்ள பிரச்சனைகளின் மொத்த உருவம் அவர். காந்தியை கோட்சே கொலை செய்த பிறகு உங்களை எல்லாம் சர்தார் பட்டேல் ஜி தடை செய்திருந்தார். நீங்கள் செயல்பட அனுமதி இல்லை. நீங்கள் தேசியவாதிகள் இல்லை, இன கொலைகாரர்கள் என்று தெரிவித்துள்ளார் ஹர்த் கவுர்.
யோகி ஆதித்யநாத்
இந்த ஆள் சூப்பர் ஹீரோ என்றால் அவர் பெயர் பலாத்கார யோகி. உங்களின் சகோதரிகள், தாய்மார்கள், மகள்கள் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்றால் அவரை அழையுங்கள். தேசிய ஹீரோ. ஆனால் நான் அவரை தனிப்பட்ட முறையில் காவிபலாத்காரமனிதர் என்றே அழைக்கிறேன் என்று ஹர்த் கவுர் யோகி ஆதித்யநாத்தை விளாசியுள்ளார்.
மோடி
மோடியின் என்ன வாக்குறுதி அளித்தார், நமக்கு என்ன கிடைத்துள்ளது என்பதை இப்படி ஒரு மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார் ஹர்த் கவுர். அவரின் ஃபேஸ்புக் போஸ்ட்டுகளை பார்த்தவர்கள் என்ன மேடம், யாராவது ஹேக் செய்துவிட்டார்களா என்று கேட்டனர். யாரும் ஹேக் செய்யவில்லை, நானே தான் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று ஹர்த் கவுர் பதில் அளித்துள்ளார்.