கமலின் விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு பிரபல வில்லன் நடிகர்

சென்னை : கமல் தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் நான்காவது மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நவம்பர் 17 ம் தேதி கோவையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

ஒரு மாதம் தொடர்ந்து நடைபெற உள்ள இந்த படப்பிடிப்பில் கமல், மெயின் வில்லன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் இணைந்து பல சீன்களில் ஒன்றாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வில்லனுக்கு மூன்று ஜோடிகள்

வில்லனுக்கு மூன்று ஜோடிகள்

இந்த படத்தில் மெயின் வில்லனான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி, ஷிவானி நாராயணன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இவர்கள் தவிர மகனான காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

கமலுக்கு 7 வில்லன்கள்

கமலுக்கு 7 வில்லன்கள்

சமீபத்தில் வெளியான தகவலின் படி, கதைப்படி படத்தில் வயதான போலீஸ் ரோலில் நடிக்கும் கமலுக்கு 7 வில்லன்களாம். மெயின் வில்லனான விஜய் சேதுபதிக்கு 6 சகோதரர்களாம். இவர்கள் 7 பேரும் இணைந்து தான் வில்லனாக கமலுடன் மோத உள்ளதாக கூறப்படுகிறது. சம்பத்ராம், செம்பன் வினோத் ஜோஷ், கோகுல், மகாதேவன் கணேஷ் ஆகியோர் விஜய் சேதுபதியின் சகோதரர்களாக நடிக்கிறார்களாம்.

இவரும் இணைகிறாரா

இவரும் இணைகிறாரா

இவர்கள் தவிர நரேன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய ரோல்களில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக பிரபல வில்லன் ஹரீஷ் பேராடியும் விக்ரம் படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. இவர் விக்ரம் வேதா படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இந்த படத்திலும் நடித்துள்ளாரா

இந்த படத்திலும் நடித்துள்ளாரா

லோகேஷ் கனகராஜ், கார்த்தியை வைத்து இயக்கிய கைதி படத்திலும் இவர் நடித்திருந்தார். இது தவிர அதிகம் எதிர்பார்க்கப்படும் பல படங்களில் மிக முக்கிய ரோல்களில் நடிக்கிறாராம் ஹரீஷ். மலையாளத்தில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே தமிழில் கிடாரி உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார் ஹரீஷ்.

விரைவில் விபரங்கள்

விரைவில் விபரங்கள்

கோவையில் தற்போது துவங்கி நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விரைவில் ஹரீஷ் கலந்து கொள்ள உள்ளாராம். கமலுடன் அவர் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும். படத்தில் மிக முக்கிய ரோல்களில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் முழுவதுமாக வெளியிடப்பட உள்ளதாம்.

ஏப்ரல் ரிலீஸ்

ஏப்ரல் ரிலீஸ்

டிசம்பர் மாத இறுதிக்கும் விக்ரம் படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் விக்ரம் படத்தின் முதல் கிளான்ஸ் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X