Bison: சாதி பாகுபாடு வேண்டாம்.. ஒற்றுமையாக இருக்கலாம்னு சொல்லும் பைசன் படத்துக்கு ஹரி நாடார் எதிர்ப்பு!

சென்னை: துருவ் விக்ரமின் பைசன் - காளமாடன் படம். இந்த படத்தை பொறுத்தவரையில், படம் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேஷனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. படத்தை மாரி செல்வராஜ் இயக்க, பா. ரஞ்சித்தின் நீலம் மற்றும் அப்லாஸ் நிறுவனம் சேர்ந்து படத்தை தயாரித்துள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் தொடங்கி, பல விமர்சகர்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் படம் சாதிய பாகுபாடு வேண்டாம், ஒற்றுமையாக இருக்கலாம் என்று சகோதரத்துவத்தை போதிக்கிறது என்று தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது இந்த படத்திற்கு சத்ரிய சான்றோர் படை தலைவர் ஹரி நாடார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பைசன் படத்திற்கு தேசிய விருதுகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் படத்தில் மாரி செல்வராஜ் பேசியுள்ள அரசியல் என்பது சமூகத்திற்கு தேவையான அரசியலாக உள்ளது. படம் முழுக்க வெட்டு குத்து இருந்தாலும், கபடி காட்சிகள், தென் மாவட்ட மக்களின் வாழ்வியல், காதல் காட்சிகள் என அனைத்தும் ரசனையின் உச்சம்.

Hari Nadar Opposed Mari Selvaraj And Dhruv Vikram Bison Movie Netizens Trolls Hari Nadar

உண்மை: அதேபோல் படத்தை விமர்சித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், " உண்மையான வரலாற்றை அருகில் இருந்து ரத்தமும் சதையுமாக இந்த படத்தை உருவாக்கி உள்ளார் மாரி செல்வராஜ். அதுவும் உண்மையாக நடந்த சம்பவங்களை ஒரு கபடி வீரனின் பார்வையில் கதையைச் சொல்லி உள்ளார். வெளிப்படையாக சொல்ல போனால் பசுபதி பாண்டியனுக்கும் வெங்கடேச பண்ணையாருக்கும் இடையில் நடைபெற்ற வாய்க்கால் தகராறு எப்படி இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான பிரச்னையாக மாறுகிறது என்பதை அப்பட்டமாக காட்டியுள்ளார். வெங்கடேச பண்ணையாரின் பெயர் கந்தசாமி பண்ணையார் என பெயர் மாற்றப்பட்டுள்ளது, இந்த கதாபாத்திரத்தை லால் நடித்துள்ளார். பசுபதி பாண்டியன் பெயர் பாண்டியராஜ் என்று மாற்றப்பட்டுள்ளது, இந்த கதாபாத்திரத்தை அமீர் நடித்துள்ளார்.

பாராட்டு: இந்த படத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்திற்கு எதிராக மாரி செல்வராஜ் பேசிவிட்டார் என்று யாராலும் சொல்ல முடியாது. மிகவும் சென்சிட்டிவான பிரச்னை இது, பசுபதி பாண்டியன், வெங்கடேச பண்ணையாருக்கு இடையிலான பிரச்னையை யூடியூப் தளத்தில் கூட பேச முடியாது. அவர்களுக்குள் பிரச்னை எங்கு தொடங்கியது என்று யாராலும் கூறவே முடியாது. இருபுறமும் தவறுகளும், அவரவர் தரப்பு நியாயங்களும் இருக்கும். அதை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார், மாரி. இந்த கதாபாத்திரங்களின் மூலம் மொத்த சமூகத்தையும் கேள்வி கேட்டுள்ளார்." என்று பாராட்டி இருந்தார்.

Hari Nadar Opposed Mari Selvaraj And Dhruv Vikram Bison Movie Netizens Trolls Hari Nadar

எதிர்ப்பு: இந்நிலையில் இந்த படத்திற்கு சத்ரிய சான்றோர் படைத் தலைவர் ஹரி நாடார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூக ஒற்றுமையை பேசிய பைசன் படத்தை ஹரி நாடார் எதிர்க்கிறார் என்றால் அவர் சமூக ஒற்றுமையை விரும்பவில்லையா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், ஹரி நாடாரை கலாய்த்தும் வருகிறார்கள். இது தொடர்பான பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பலரோ, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், என்ன மாதிரியான படம் எடுக்க வேண்டும் என்றும் அந்த படம் சமூக ஒற்றுமையை சகோதரத்துவத்தை பேசுகிற படத்தை ஹரி நாடார் எடுத்துக் காட்டுவாரா என்றும் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X