»   »  உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி இல்லை: தமிழ் ராக்கர்ஸுக்கு ஹரி பதில்

உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி இல்லை: தமிழ் ராக்கர்ஸுக்கு ஹரி பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யாருக்கு வந்தாலும் ரத்தம் ரத்தம் தான் என இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.

சிங்கம் 3 படம் ரிலீஸான அன்றே காலை 11 மணிக்கு அதை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் சவால் விட்டுள்ளது. படத்தை வெளியிட்டால் உங்களை கண்டுபிடித்து சிறையில் தள்ளுவேன் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இது குறித்து இயக்குனர் ஹரி பிரபல இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,


திருட்டு விசிடி

திருட்டு விசிடி

ரசிகர்களுக்கே படங்களை திருட்டு விசிடி அல்லது பிற திருட்டுத்தனமான சேனல்களில் பார்க்க பிடிப்பது இல்லை. ஒரு படத்தை எடுக்க பலர் கடினமாக உழைக்கிறார்கள்.
கோபம்

கோபம்

திருட்டுத்தனமாக படத்தை வெளியிடுபவர்களுக்கு எதன் மீது கோபம்? சினிமா துறையின் தயாரிப்பாளர்களுக்கு தான் அவர்களால் பாதிப்பு. திருட்டுத்தனமாக படத்தை வெளியிடுவது சினிமா துறைக்கு ஆரோக்கியமானது அல்ல.


 வேண்டுகோள்

வேண்டுகோள்

பைரசியை யாரும் ஆதரிக்க வேண்டாம் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வேலை செய்கிறோம். விரும்பி கடினமாக வேலை செய்கிறோம்.


ரத்தம்

ரத்தம்

எங்கள் படம் பாதிக்கப்பட்டால் அது எங்களை காயப்படுத்தும். அனைவருக்கும் ரத்தம் ஒன்று தான். நாம் யார் வாழ்வையும் நாசமாக்க வேண்டாம். நாங்கள் உங்களின் சமையல்காரர்கள். எங்கள் மீது கல்லெறிவதை நிறுத்துங்கள் என்றார் ஹரி.


English summary
Singam 3 director Hari said blood is same for everyone. He said so at a time when Tamil Rockers challenged to live stream Singam 3 on the same day of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil