»   »  14 ஆயிரம் அடி படத்துக்கு 8 லட்சம் அடி ஃபுட்டேஜ்... இதெல்லாம் பெருமையா பாஸ்?

14 ஆயிரம் அடி படத்துக்கு 8 லட்சம் அடி ஃபுட்டேஜ்... இதெல்லாம் பெருமையா பாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிங்கம் 3 படம் அடுத்த வாரம் ரிலீஸாகவிருக்கிறது. தெலுங்கு பக்கம் மட்டும் இரண்டு மாதங்களாக ஓடியாடி புரமோஷன் செய்துகொண்டிருந்தவர்களுக்கு நேற்று முன் தினம் காலை திடீரென்று அட.. தமிழ்லயும் ரிலீஸ் பண்றோம்ல? என்ற நினைவு வந்து அவசர அவசரமாக ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்தார்கள்.

இதில் பெருமையாக சொன்ன ஒரு விஷயம்தான் அவர்களுக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. இயக்குநர் ஹரி பேசும்போது 'இந்த படத்துல எடிட்டரோட பங்கு ரொம்ப முக்கியம். 8 லட்சம் அடி ஃபுட்டேஜ் எடுத்திருந்தோம். மொத்தம் 8 கேமராக்கள் பயன்படுத்தினேன்' என்று பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார்.

Hari shoots 8 lakh ft footage for Si3

ஒரு படத்துக்கு தேவையான அளவு என்பது வெறும் 14 ஆயிரம் அடிதான். ஆனால் 8 லட்சம் அடி எடுத்திருக்கிறார்கள் என்றால் அது எத்தனை மணி நேரம் ஷூட்டிங்காக இருக்கும்? செலவு எந்த அளவுக்கு எகிறியிருக்கும்? ஒரு இயக்குநர் இவ்வளவு நீளம் எடுத்து வெட்டினால் அந்த படம் சரியாக வரவில்லை என்றுதானே அர்த்தம்? இத்தனை கேள்விகள் சாதாரண சினிமா ரசிகனுக்கே எழும்.

ஆனால் இதையெல்லாம் கூட பெருமையாக பீற்றிக்கொள்கிறார்கள். பெரிய டைரக்டர்னா இப்படித்தான் போல...!

English summary
Director Hari has revealed that he shot more than 8 lakh feet footage for Si 3 and the same turned as a controversy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil