»   »  மீண்டும் சேரும் ஹரி-சூர்யா கூட்டணி: அட, அந்த படம் இல்லப்பா...

மீண்டும் சேரும் ஹரி-சூர்யா கூட்டணி: அட, அந்த படம் இல்லப்பா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் ஹரி-சூர்யா மீண்டும் கூட்டணி சேர்கிறார்கள்.

ஹரி இயக்கத்தில் சூர்யா முதல்முதலாக நடித்த படம் ஆறு. அதன் பிறகு வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிங்கம் 4 எடுக்கும் திட்டமும் வைத்துள்ளார் ஹரி.

Hari, Suriya to team up again

இந்நிலையில் ஹரி-சூர்யா மீண்டும் கூட்டணி சேர்கிறார்கள். அட, சிங்கம் 4 படத்திற்கு அல்ல. புதிதாக ஒரு கதையை படமாக்க உள்ளார்கள். சிங்கம் 4 எடுக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகுமாம்.

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு செல்வராகவன் படத்தில் நடிக்கிறார். செல்வா படத்தை முடித்த பிறகு ஹரி இயக்கத்தில் நடிக்கிறாராம் சூர்யா.

ஹரி விக்ரமை வைத்து சாமி 2 படத்தை எடுக்க உள்ளார். அதன் பிறகு சூர்யாவை இயக்குகிறார்.

English summary
Suriya and director Hari are coming together again for a movie. It is not Singam 4 but some fresh story.
Please Wait while comments are loading...