twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹரிதாஸ்... உலகத் தரம் என்பதற்கு அர்த்தம் சொல்லும் தமிழ்ப் படம்!!

    By Shankar
    |

    இந்த வெள்ளிக்கிழமை வெளிவரவிருக்கும் படம் 'ஹரிதாஸ்'. ஆனால் படத்தின் சிறப்புக் காட்சி சில தினங்களாக பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்களுக்குத் திரையிடப்பட்டு வருகிறது.

    இந்தப் படத்தில் கிஷோர், சினேகா, பிருத்விராஜ் தாஸ், பரோட்டா சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    சமீபத்திய தமிழ் சினிமாவில் எளிய, மிகச் சிறந்த படைப்பு என படம் பார்த்த அனைவரும் வாய்விட்டுப் பாராட்டிய படம் என்றால் அது ஹரிதாஸ்தான்.

    வித்யாசமான படைப்பு

    வித்யாசமான படைப்பு

    நிஜமான உலகத் தரம் என்று சொல்லும் விதத்தில் கதைக் களனும் காட்சியமைப்பும் பாத்திரத் தேர்வும் அமைந்துள்ளது இந்தப் படத்தின் சிறப்பு. திணிக்கப்பட்ட காட்சி அல்லது செய்தி அல்லது பாடல்கள் அல்லது மலிவான காமெடி என எதுவும் இந்தப் படத்தில் தேடினாலும் கிடைக்காது. அந்த அளவு வெகு நேர்த்தி!

    ஜிஎன்ஆர் குமாரவேலன்

    ஜிஎன்ஆர் குமாரவேலன்

    கல்யாணராமன், மீண்டும் கோகிலா என அற்புதமான படங்களைத் தந்த பிரபல இயக்குநர் ஜிஎன் ரங்கராஜனின் மகன்தான் ஹரிதாஸை இயக்கிய ஜிஎன்ஆர் குமாரவேலன்.

    இதற்கு முன் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி என இரு வழக்கமான படங்களைத் தந்திருந்ததால், இவரிடமிருந்து இப்படியொரு உன்னதமான படைப்பை பலரும் எதிர்ப்பார்க்கவில்லை.

    சினேகா

    சினேகா

    இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று சினேகாவின் அற்புதமான நடிப்பு. அவருக்கு திருமண அறிவிப்பு வெளியான நேரத்தில் இந்தப் படத்தை ஒப்புக் கொண்டிருந்தார். அமுதவல்லி என்ற ஆசிரியையாக வரும் சினேகா... அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு சினேகா மீண்டும் படுபிஸியாகிவிடுவார் என்பது சர்வநிச்சயம்!

    கிஷோர்

    கிஷோர்

    இந்த மனிதரால் எப்படி எந்த பாத்திரத்தையும் இத்தனை நுணுக்கமாக உள்வாங்கி, அழகாக வெளிப்படுத்த முடிகிறது என்ற ஆச்சர்யம் எழாமலில்லை. வெகு அரிதான கலைஞர். யாருடனும் ஒப்பிடமுடியாத தனித்துவம்தான் இவரது நடிப்பின் சிறப்பு.

    குவியும் வாழ்த்துகள்

    குவியும் வாழ்த்துகள்

    படம் பார்த்த பத்திரிகையாளர்கள் பலரும் கலங்கிய கண்களோடு எழுந்து நின்று பலமாகக் கைத்தட்டி தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். திரையுலக பிரமுகர்கள் பலரும், தங்களை வெகுவாக இந்தப் படம் பாதித்துவிட்டதாகக் கூறி இயக்குநர் ஜிஎன்ஆர் குமாரவேலனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

    நம் கவலையெல்லாம், இந்த மாதிரிப் படங்கள் பாராட்டுகளைக் குவிப்பதோடு வசூலையும் குவிக்க வேண்டும். தமிழக ரசிகர்கள் புரியாத விஷயங்களை உலகத் தரம் என்று கொண்டாடும் கேவலத்தை விட்டுவிட்டு, நிஜமான உலகத் தரத்தில் வந்துள்ள ஹரிதாஸ் போன்ற படங்களைக் கொண்டாட வேண்டும் என்பதே. நடக்குமா...?

    English summary
    GNR Kumaravelan's Haridass is one of the best movies among the recent movies we have seen.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X