»   »  மலையூர் மம்பட்டியான் மாதிரி மதுரை மணிக்குறவன்...!

மலையூர் மம்பட்டியான் மாதிரி மதுரை மணிக்குறவன்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜா இசையில் ஹரிகுமார் நடிக்கும் படம் "மதுரை மணிக்குறவன்" மலையூர் மம்பட்டியான் படம் போல இருக்கும் என்று அதன் இயக்குநர் ராஜரிஷி கூறயுள்ளார்.

காளையப்பா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.ஜி.காளையப்பன் தயாரிக்கும் படம் "மதுரை மணிக்குறவன்".

இரட்டை வேடங்களில் நடிக்கும் ஹரிகுமார் இந்த படத்திற்காக சில பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். தோற்றத்திலும் உடல்வாகு, மற்றும் நடை, உடை பாவனையிலும் வித்தியாசத்தை காட்டி நடித்து வருகிறார்.

மாதவிலதா...

மாதவிலதா...

இப்படத்தில் பிரதான நாயகியாக நடிப்பவர் மாதவிலதா. அழகான கிராமத்து முக வெட்டுடன், அச்சு அசல் கிராமத்துப் பெண்ணாகவே காட்சி தருகிறார் மாதவி லதா.

மேலும் 2 நாயகிகள்...

மேலும் 2 நாயகிகள்...

இவர் தவிர மேலும் 2 நாயகிகளும் படத்தில் உள்ளனர். அவர்கள் ரிஷிதா மற்றும் பவித்ரா. இவர்கள் தவிர சரவணன், சுமன், கே.ஜி.காளையப்பன், சுஜாதா, அனுமோகன், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், போண்டாமணி, முத்துக்காளை, ஐவரி.கே.சண்முகம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இசை இளையராஜா...

இசை இளையராஜா...

படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா. கலை -முருகன் / எடிட்டிங் - வி.டி.விஜயன். ஸ்டன்ட் - ஜாக்குவார் தங்கம் / வசனம் - வெற்றி

இயக்குநர் ராஜரிஷி...

இயக்குநர் ராஜரிஷி...

படத்தின் கதையை எழுதி இயக்குபவர் ராஜரிஷி. படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படம் பற்றி இயக்குனர் ராஜரிஷியிடம் கேட்டோம்...

வட்டார மக்களின் நம்பிக்கை...

வட்டார மக்களின் நம்பிக்கை...

அந்தந்த பகுதிகளில் மக்களின் பிரச்சனைகளுக்கு போராடி வட்டார மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி, போன்று மதுரை மணிக்குரவனும் ஒருவன்.

மண் சார்ந்த மனிதன்...

மண் சார்ந்த மனிதன்...

மண் சார்ந்த மனிதனின் வாழ்க்கைக்கு இளையராஜாவின் இசை சிறப்பாக இருக்கும் என்று அவரை அணுகினோம். அவரும் கதையை கேட்டு கதைக்கு உயிரூட்டுகிறேன் என்று அருமையாக டியூன் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இதுவே முதல் வெற்றி...

இதுவே முதல் வெற்றி...

அது எங்கள் யூனிட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார் இயக்குனர் ராஜரிஷி. இசைஞானியுடன் கை கோர்த்த மதுரை மணிக்குறவனுக்கு வெற்றி கிடைக்கட்டும்.

English summary
Madurai Sambavam fame Harikumar is currently busy with his next film, Madurai Manikuravan, in which he plays a dual role that of a Kuravan, and the other a police inspector.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil