»   »  விஜய் சேதுபதி பட டைரக்டரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்!

விஜய் சேதுபதி பட டைரக்டரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் கலந்துகொண்டாலும், பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைவதற்கு சில நாட்கள் முன்பு வரை நிகழ்ச்சியில் போட்டியாளராக நீடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு மற்ற பிரபலங்களுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது போலவே, ஹரிஷ் கல்யாணுக்கும் சூப்பரான வாய்ப்பு கிடைத்தது. ஹரிஷுக்கு ஜோடியாக பிக்பாஸ் ரைசா நடிக்க 'பியார் பிரேம காதல்' படம் உருவானது.

Harish kalyan to act in ranjit jeyakodi direction

'பியார் பிரேம காதல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாடல் என எல்லாமே ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்றது. இளன் இயக்கும் இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே, 'சிந்து சமவெளி', 'பொறியாளன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ஹரிஷ் தற்போது இன்னொரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். 'புரியாத புதிர்' படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ஹரிஷ்.

விஜய் சேதுபதி, காயத்ரி ஆகியோரை வைத்து 'புரியாத புதிர்' படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி அடுத்ததாக பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் விவரம் சினிமா ஸ்ட்ரைக் முடிந்தபிறகு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

English summary
Biggboss Harish kalyan to act in 'Puriyatha puthir' director Ranjith jeyakodi's next film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X