»   »  ஓவியாவை அடுத்து ஜூலியின் குட்டை உடைத்த ஹரிஷ் கல்யாண்

ஓவியாவை அடுத்து ஜூலியின் குட்டை உடைத்த ஹரிஷ் கல்யாண்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஓவியாவை அடுத்து ஜூலியின் குட்டை உடைத்த ஹரிஷ் கல்யாண்- வீடியோ

சென்னை: ஜூலி தற்போதும் பொய் பேசுவது தெரிய வந்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக போராடிய பொண்ணு என்ற பெயர் போய் போலி என்ற பெயர் வாங்கிவிட்டார் ஜூலி. பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் போலியாக நடந்து கொண்டதாக சக போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

ஜூலி பொய் பேசி கமல் ஹாஸனிடமே சிக்கினார்.

ஜூலி

ஜூலி

நான் ஹரிஷ் கல்யாணுடன் அடிக்கடி போனில் பேசி வருகிறேன் என்று ஜூலி தெரிவித்தார். ஜூலி ஹரிஷுடன் பேசுகிறாரா, நம்ப முடியவில்லையே என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

பொய்

பொய்

ஜூலி என்னுடன் அடிக்கடி போனில் எல்லாம் பேசவில்லை. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் ஒரேயொரு முறை தான் பேசினார். அவர் பொய் சொல்கிறார் என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

போன்

போன்

நான் ஓவியாவுடன் நட்பாகி விட்டேன். அவருடன் அடிக்கடி போனில் பேசுகிறேன் என்று முன்பு ஜூலி தெரிவித்தார். தான் யாருடனும் போனில் பேசவில்லை என்று ஒரேபோடாக போட்டார் ஓவியா.

அசிங்கம்

அசிங்கம்

பொய் சொல்லி சொல்லி சிக்குவதே இந்த ஜூலிக்கு வேலையாகிவிட்டது. இவரை திருத்தவே முடியாது விடுங்க என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மீம்ஸ்

மீம்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் எங்கு சென்றாலும் ஒரே கூட்டம் கூடி விடுகிறது என்று முன்பு ஜூலி தெரிவித்தார். இதையடுத்து அவர் பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற புகைப்படத்தை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் இது தான் கூட்டமா ஜூலி என்று கேட்டு மீம்ஸ் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: oviya, juliana, ஓவியா
English summary
After Oviya, Harish Kalyan exposes fellow former Bigg Boss contestant Juliana's lies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil