Diesel X Review: டீசல் ட்விட்டர் விமர்சனம்.. ஆக்ஷன் அதகளம்.. ஹரிஷ் கல்யாணின் டீசல் படம் எப்படி?
சென்னை: இந்த தீபாவளிக்கு ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படமும் களத்தில் குதித்துள்ளது. இன்று மதியம் பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட நிலையில், டீசல் படத்தின் ட்விட்டர் விமர்சனம் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாஸிகா உள்ளிட்ட பலர் நடித்த லப்பர் பந்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆரம்பத்தில், அந்த படம் வெளியாகும் போது, என்னடா இது லப்பர் பந்து என டைட்டில் வைத்துள்ளனர் என்றும் இதெல்லாம் தேறாது என சொன்னவர்கள் எல்லாம் படத்தை பார்த்து அசந்து போய்விட்டனர்.

அதற்கு முன்னதாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படமும் சமீபத்தில் தேசிய விருதுகளை அள்ளி மாஸ் காட்டிய நிலையில், தொடர்ந்து அறிமுக இயக்குநர்களை வைத்து ஹிட் கொடுத்து வரும் ஹரிஷ் கல்யாண் இந்த டீசல் படத்தின் மூலம் ஹாட்ரிக் அடித்தாரா? இல்லையா? என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
ஹாட்ரிக்கை எதிர்பார்த்து ஹரிஷ் கல்யாண்: அமலா பால் நடித்த சிந்து சமவெளி படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஹரிஷ் கல்யாண் பெரிதாக பட வாய்ப்புகள் வராத நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அந்த சீசனில் இருந்து வெளியேறியதும் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே இருந்து படிப்படியாக முன்னேறிய ஹரிஷ் கல்யாணுக்கு பார்க்கிங் திரைப்படம் எக்கச்சக்க பாராட்டுக்களை குவிக்க, லப்பர் பந்து திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள டீசல் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி ஹரிஷ் கல்யாண் காத்துக் கொண்டிருக்கிறார். டியூட் மற்றும் பைசன் என பலத்த போட்டி நிலவும் நிலையில், ஹரிஷ் கல்யாணின் டீசல் எந்தளவுக்கு கல்லா கட்டும் என்றும் குறைவாகவே தியேட்டர்கள் கிடைத்துள்ள நிலையில், மவுத் டாக் மூலமாக தியேட்டர்கள் அதிகரிக்குமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
ஹரிஷ் கல்யாண் செம: டீசல் திரைப்படத்தின் முதல் பாதி ரொம்பவே க்ரிஸ்ப்பாகவும் ஸ்ட்ராங்காகவும் உள்ளது. ஹரிஷ் கல்யாணின் நடிப்பு மேலும் மெருகேறியுள்ளது. போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் வினய் மிரட்டியுள்ளார். அவரை தவிர வேற யாரும் அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியுமா என்பதே சந்தேகம் தான். இயக்குநர் ஷண்முகம் முத்துசாமியின் எழுத்து படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. திபு நிணனின் இசை ரொம்பவே நைஸ் என விமர்சனத்தை கொடுத்துள்ளார் சுந்தர் பாலா.
க்ரூட் ஆயில் கதை: சாய் குமார் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் இணைந்து க்ரூட் ஆயிலை திருடுகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக இதை செய்கின்றனர். 80களில் ஒரு கதையும் கரன்ட்டில் ஒரு கதையும் என நகர்கிறது. வழக்கமான மோதல் கதையாக உள்ளது. 2ம் பாதியில் ஹீரோ, வில்லன் ஃபேஸ் ஆஃப் சரியாக வொர்க்கவுட் ஆனால், படம் க்ளிக் ஆகும். ஹரிஷ் கல்யாணின் ஹார்ட் வொர்க் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு பலமாக உள்ளதாக இந்த நெட்டிசன் விமர்சனம் கொடுத்துள்ளார்.
வெற்றிமாறன் வாய்ஸ்: ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம் வெற்றிமாறனின் வாய்ஸ் ஓவரில் தொடங்கி பரபரப்பாக செல்கிறது. பீர் சாங் தீபாவளி வைபை கொடுக்கிறது. க்ரூட் ஆயில் ஸ்மக்லிங் குறித்த டீட்டெய்லிங் எல்லாம் பக்காவாக இயக்குநர் செதுக்கியிருக்கிறார் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.
சுமார் தான் பாஸ்: ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம் பெரிதாக பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்கிற ரேஞ்சுக்கு இல்லை என்றும் சுமாராகவே உள்ளது என்றும் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. ஹரிஷ் கல்யாணின் நடிப்பும் க்ரூட் ஆயில் அரசியல் கதையும் மக்களை கவர்ந்தால் தான் படம் பந்தயம் அடிக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











