»   »  மனைவியிடன் சேர்ந்து வாழ ஆசை- ஹரீஷ் எனது மனைவியுடன் சேர்ந்து வாழத்தான் எனக்கு ஆசை. அவரை எந்தக் காரணம் கொண்டும் விவாகரத்து செய்ய மாட்டேன்என்று நடிகரும், பின்னணிப் பாடகருமான ஹரீஷ் ராகவேந்திரா கூறியுள்ளார்.தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான பாடகராக விளங்குபவர் ஹரீஷ் ராகவேந்திரா. பாரதி படத்தின் மூலம்பின்னணிப் பாடகராக அறிமுகமான இவருக்கு அந்தப் படத்தில் பாடிய நிற்பதுவே நடப்பதுவே பாடல் பெரும் புகழைப்பெற்றுத் தந்தது. இது தவிர மின்னலே படத்தில் இவர் பாடிய ஏ அழகிய தீயே என்ற பாடலும் ஹிட்டானது.இவருக்கு சினிமா ஹீரோவுக்கான முகவெட்டு இருந்ததால் அருண்பாண்டியனின் விகடன் படத்தில் ஹீரோவாக நடித்தார். இதுதவிர கற்பனை என்ற படத்திலும் தற்போது ஹரீஷ் நடித்து வருகிறார்.இவர் கடந்த இரு வருடங்களுக்கு முன் ஒரு இசை நிகழ்ச்சிக்காக மலேஷியா சென்றிருந்தார். அப்போது மலேஷியாவை சேர்ந்தஉமா தேவி என்பவருக்கும், ஹரீஷுக்கும் காதல்த மலர்ந்தது. பின் கடந்த 2003ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன்இருவருக்கும் திருமணம் நடந்தது.சில மாதங்களுக்கு முன் உமாதேவி பிரசவத்திற்காக மலேசியா சென்றார். அதன் பின்னர் அவர் சென்னை திரும்பவில்லை.மனைவியுடன் ஹரீஷ் பேச முயன்றும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.இந் நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஹரீஷ் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மனைவியைதன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.இந் நிலையில் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் என்பது குறித்து ஹரீஷ் ராகவேந்திரா கூறுகையில், நான்விகடன் படத்தில் நடித்துள்ளேன். தற்போது கற்பனை என்ற படத்திலும் நடித்து வருகிறேன்.மேலும் சில வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எனது மனைவிக்கு நான் சினிமாவில் நடிப்பதுபிடிக்கவில்லை. மலேஷியாவில் அவர் சாப்ட்வேர் பிசினஸ் செய்கிறார். இதனால் என்னையும் மலேஷியாவுக்கு வந்து விடும்படிவற்புறுத்துகிறார்.சினிமா வாழக்கையை தூர எறிந்து விட்டு என்னால் மலேஷியாவுக்கு செல்ல முடியாது. எனக்கு என்னுடைய மனைவியிடன்சேர்ந்து வாழத்தான் ஆசை. ஆனால் அவருக்குத் தான் இந்தியா பிடிக்கவில்லை.எனக்கு என்னுடைய மனைவியும் குழந்தையும் வேண்டும். அதனால் தான் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.என்னுடைய மனைவியை நான் எந்தக் காரணம் கொண்டும் விவாகரத்து செய்ய மாட்டேன். என்னுடைய மனைவியின் பதிலைநான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

மனைவியிடன் சேர்ந்து வாழ ஆசை- ஹரீஷ் எனது மனைவியுடன் சேர்ந்து வாழத்தான் எனக்கு ஆசை. அவரை எந்தக் காரணம் கொண்டும் விவாகரத்து செய்ய மாட்டேன்என்று நடிகரும், பின்னணிப் பாடகருமான ஹரீஷ் ராகவேந்திரா கூறியுள்ளார்.தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான பாடகராக விளங்குபவர் ஹரீஷ் ராகவேந்திரா. பாரதி படத்தின் மூலம்பின்னணிப் பாடகராக அறிமுகமான இவருக்கு அந்தப் படத்தில் பாடிய நிற்பதுவே நடப்பதுவே பாடல் பெரும் புகழைப்பெற்றுத் தந்தது. இது தவிர மின்னலே படத்தில் இவர் பாடிய ஏ அழகிய தீயே என்ற பாடலும் ஹிட்டானது.இவருக்கு சினிமா ஹீரோவுக்கான முகவெட்டு இருந்ததால் அருண்பாண்டியனின் விகடன் படத்தில் ஹீரோவாக நடித்தார். இதுதவிர கற்பனை என்ற படத்திலும் தற்போது ஹரீஷ் நடித்து வருகிறார்.இவர் கடந்த இரு வருடங்களுக்கு முன் ஒரு இசை நிகழ்ச்சிக்காக மலேஷியா சென்றிருந்தார். அப்போது மலேஷியாவை சேர்ந்தஉமா தேவி என்பவருக்கும், ஹரீஷுக்கும் காதல்த மலர்ந்தது. பின் கடந்த 2003ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன்இருவருக்கும் திருமணம் நடந்தது.சில மாதங்களுக்கு முன் உமாதேவி பிரசவத்திற்காக மலேசியா சென்றார். அதன் பின்னர் அவர் சென்னை திரும்பவில்லை.மனைவியுடன் ஹரீஷ் பேச முயன்றும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.இந் நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஹரீஷ் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மனைவியைதன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.இந் நிலையில் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் என்பது குறித்து ஹரீஷ் ராகவேந்திரா கூறுகையில், நான்விகடன் படத்தில் நடித்துள்ளேன். தற்போது கற்பனை என்ற படத்திலும் நடித்து வருகிறேன்.மேலும் சில வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எனது மனைவிக்கு நான் சினிமாவில் நடிப்பதுபிடிக்கவில்லை. மலேஷியாவில் அவர் சாப்ட்வேர் பிசினஸ் செய்கிறார். இதனால் என்னையும் மலேஷியாவுக்கு வந்து விடும்படிவற்புறுத்துகிறார்.சினிமா வாழக்கையை தூர எறிந்து விட்டு என்னால் மலேஷியாவுக்கு செல்ல முடியாது. எனக்கு என்னுடைய மனைவியிடன்சேர்ந்து வாழத்தான் ஆசை. ஆனால் அவருக்குத் தான் இந்தியா பிடிக்கவில்லை.எனக்கு என்னுடைய மனைவியும் குழந்தையும் வேண்டும். அதனால் தான் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.என்னுடைய மனைவியை நான் எந்தக் காரணம் கொண்டும் விவாகரத்து செய்ய மாட்டேன். என்னுடைய மனைவியின் பதிலைநான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

எனது மனைவியுடன் சேர்ந்து வாழத்தான் எனக்கு ஆசை. அவரை எந்தக் காரணம் கொண்டும் விவாகரத்து செய்ய மாட்டேன்என்று நடிகரும், பின்னணிப் பாடகருமான ஹரீஷ் ராகவேந்திரா கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான பாடகராக விளங்குபவர் ஹரீஷ் ராகவேந்திரா. பாரதி படத்தின் மூலம்பின்னணிப் பாடகராக அறிமுகமான இவருக்கு அந்தப் படத்தில் பாடிய நிற்பதுவே நடப்பதுவே பாடல் பெரும் புகழைப்பெற்றுத் தந்தது. இது தவிர மின்னலே படத்தில் இவர் பாடிய ஏ அழகிய தீயே என்ற பாடலும் ஹிட்டானது.

இவருக்கு சினிமா ஹீரோவுக்கான முகவெட்டு இருந்ததால் அருண்பாண்டியனின் விகடன் படத்தில் ஹீரோவாக நடித்தார். இதுதவிர கற்பனை என்ற படத்திலும் தற்போது ஹரீஷ் நடித்து வருகிறார்.

இவர் கடந்த இரு வருடங்களுக்கு முன் ஒரு இசை நிகழ்ச்சிக்காக மலேஷியா சென்றிருந்தார். அப்போது மலேஷியாவை சேர்ந்தஉமா தேவி என்பவருக்கும், ஹரீஷுக்கும் காதல்த மலர்ந்தது. பின் கடந்த 2003ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன்இருவருக்கும் திருமணம் நடந்தது.

சில மாதங்களுக்கு முன் உமாதேவி பிரசவத்திற்காக மலேசியா சென்றார். அதன் பின்னர் அவர் சென்னை திரும்பவில்லை.மனைவியுடன் ஹரீஷ் பேச முயன்றும் முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந் நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஹரீஷ் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மனைவியைதன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இந் நிலையில் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் என்பது குறித்து ஹரீஷ் ராகவேந்திரா கூறுகையில், நான்விகடன் படத்தில் நடித்துள்ளேன். தற்போது கற்பனை என்ற படத்திலும் நடித்து வருகிறேன்.

மேலும் சில வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எனது மனைவிக்கு நான் சினிமாவில் நடிப்பதுபிடிக்கவில்லை. மலேஷியாவில் அவர் சாப்ட்வேர் பிசினஸ் செய்கிறார். இதனால் என்னையும் மலேஷியாவுக்கு வந்து விடும்படிவற்புறுத்துகிறார்.

சினிமா வாழக்கையை தூர எறிந்து விட்டு என்னால் மலேஷியாவுக்கு செல்ல முடியாது. எனக்கு என்னுடைய மனைவியிடன்சேர்ந்து வாழத்தான் ஆசை. ஆனால் அவருக்குத் தான் இந்தியா பிடிக்கவில்லை.

எனக்கு என்னுடைய மனைவியும் குழந்தையும் வேண்டும். அதனால் தான் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.என்னுடைய மனைவியை நான் எந்தக் காரணம் கொண்டும் விவாகரத்து செய்ய மாட்டேன். என்னுடைய மனைவியின் பதிலைநான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

Read more about: news

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil