»   »  'ஹப்பா... காணாம போயிருந்த ஹாரிஸ் ஜெயராஜைக் கண்டுபிடிச்சிட்டாங்க!'

'ஹப்பா... காணாம போயிருந்த ஹாரிஸ் ஜெயராஜைக் கண்டுபிடிச்சிட்டாங்க!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இத்தனை நாள் எங்கிருக்கிறார் என்றே தெரியாமலிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் வெளியே வந்திருக்கிறார். மீண்டும் ஜெயம் ரவியின் படத்துக்கு இசையமைக்கிறார்.

கோடிகளில் சம்பளம், மந்தமான வேலை, எப்போது படத்தை முடித்துத் தருவார் என்றே தெரியாத நிலை. இருந்தாலும் அவ்வப்போது ஹிட் கொடுத்ததால் தாக்குப் பிடித்த ஹாரிஸ் ஜெயராஜ், தொடர்ந்து தன் போக்கை மாற்றிக் கொள்ளாததாலும், சமீபமாய் அவ்வளவாக ஹிட்கள் இல்லாததாலும் எல்லோராலும் கைவிடப்பட்ட இசையமைப்பாளரானார்.

Harris Jayaraj in Jayam Ravi's next

இப்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'தாம் தூம்', 'எங்கேயும் காதல்' என ஜெயம் ரவியின் 2 படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். 2 படங்களும் பாக்ஸ் ஆபீஸில் சொதப்பினாலும் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் ஜெயம் ரவி - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி நீண்ட இடைவேளைக்குப் பின் ஏ.எல்.விஜய் படம் மூலமாக ஒன்றிணைந்துள்ளனர். ஜெயம் ரவி தற்போது 'போகன்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

மறுபுறம் விஜய் பிரபுதேவா-தமன்னாவின் 'தேவி'யில் மும்முரமாக இருக்கிறார். இருவரும் தத்தமது படங்களை முடித்த பின் இவர்கள் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'போகன்' படத்துக்குப்பின் சக்தி சவுந்தர் ராஜன், சுசீந்திரன், கவுதம் மேனன், சமுத்திரக்கனி, ஏ.எல்.விஜய் மற்றும் மோகன் ராஜா ஆகிய 6 இயக்குநர்களின் படங்களில், ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார்.

இதில் ஏ.எல்.விஜய் படத்தில் ஜெயம் ரவி முதலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
After Engeyum Kadhal Harris Jayaraj again Team up with Jayam Ravi for His Next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil