»   »  சிங்கம் 3... வந்தார் 'காணாமல் போயிருந்த' ஹாரிஸ் ஜெயராஜ்!

சிங்கம் 3... வந்தார் 'காணாமல் போயிருந்த' ஹாரிஸ் ஜெயராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எக்கச்சக்க சம்பளம், ஏகத்துக்கும் டிலே... இப்படிப் போய்க் கொண்டிருந்ததால், திடீரென காணாமல் போனார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

இந்த ஆண்டு அவர் இசையமைத்து ஹிட்டடித்த படம் என்று பெரிதாக எதுவும் இல்லை.

மொத்தமே மூணுதான்...

மொத்தமே மூணுதான்...

2015-ல் அவர் இசையில் அனேகன், என்னை அறிந்தால், நண்பேன்டா படங்கள் வெளியாகின. மூன்றில் அனேகன் பரவாயில்லை. இரண்டு பாடல்கள் ஹிட். டங்கா மாரி படு பாப்புலரானது. ஆனால் மற்ற படங்களில் எடுபடவில்லை.

கையிலிருப்பது ஒண்ணுதான்

கையிலிருப்பது ஒண்ணுதான்

இப்போது அவர் உதயநிதி ஸ்டாலினின் கெத்து படத்துக்கு மட்டும்தான் இசை அமைக்கிறார். வேறு படங்கள் இல்லை.

லேட்டோ லேட்டு

லேட்டோ லேட்டு

கோடிகளில் சம்பளம்... மாதக்கணக்கில் காத்திருக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று செல்வாக்காக இருந்த ஹாரிஸுக்கு ஏன் இந்த நிலை? அசாதாரண தாமதம். சில படங்களை வருடக் கணக்கில்கூட இழுத்தடிப்பதாக புகார் இவர் மீது.

மாறிட்டாரா?

மாறிட்டாரா?

சரி, இப்பவாவது மாறிட்டாரா? அப்படியெல்லாம் மாறிடுவாரா என்ன! கையில் வேறு படங்கள் இல்லை. இப்போ போனா அடிச்சுக் கொடுத்துடுவாரு என்ற நம்பிக்கையில் அவரிடம் போயிருக்கிறது சிங்கம் 3 டீம்.

ஹரி - சூர்யா - ஹாரிஸ் கூட்டணி

ஹரி - சூர்யா - ஹாரிஸ் கூட்டணி

ஹரி இயக்கும் இந்தப் படத்துக்கு முதலில் அனிருத் இசையமைப்பார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் பயங்கர பிஸி. இன்னொரு ஹாரிஸ் ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருக்கிறாராம். சரி, தம்பிய விட்டுடுவோம் என்று முடிவு செய்து, ஹாரிஸ் ஜெயராஜிடம் வந்திருக்கிறார்களாம்.

English summary
Sources says that Harris Jayaraj is going to score music for Surya - Hari's Singam 3.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil