Don't Miss!
- Sports
ஓ இதுதான் காரணமா...?? பும்ராவிடம் கூறிய ஸ்பெஷல் கேப்டன்சி அட்வைஸ்.. டிராவிட் வெளிப்படை பேச்சு!
- Finance
'இந்த' துறையில் ரூ.30 கோடி-யா.. அசத்தும் ஈரோடு ஆர்த்தி..!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Automobiles
உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா? இனி கவனமா இருக்கணும்!
- News
நாட்டிலேயே எளிமையான முதல்வர் ஸ்டாலின்.. ஏற்றத்தாழ்வே காட்ட மாட்டாரு - அமைச்சர் பி.மூர்த்தி புகழாரம்
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
12 நாட்களாக காணவில்லை.. கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை.. பிரபல பாடகி சங்கீதாவுக்கு நேர்ந்த கொடூரம்
டெல்லி: பிரபல பாடகி சங்கீதா கடந்த 12 நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது உடல் ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக நாடு முழுவதும் திரைத்துறையை சேர்ந்த ஏகப்பட்ட இளம் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்ந்து வரும் நிலையில், டெல்லியில் வசித்து வந்த பாடகி சங்கீதாவின் கோர மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மியூசிக் ஆல்பத்திற்கு வீடியோ எடுப்பதாகக் கூறி அவரது நண்பர்களே அவரை கொலை செய்துள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Top Gun Review: ஃபைட்டர் ஜெட் விமானியாக டாம் க்ரூஸ் தனது மிஷன் இம்பாசிபிளை முடித்தாரா? இல்லையா?

தொடரும் மரணங்கள்
கொரோனா, மாரடைப்பு என சினிமா பிரபலங்கள் உயிரிழந்து வந்த நிலையில், தற்போது சினிமாவை சேர்ந்த இளம் பெண்கள் தொடர்ந்து மரணித்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வங்காளத்தை சேர்ந்த டிவி நடிகை, பெங்களூருவை சேர்ந்த நடிகை மற்றும் கேரளாவை சேர்ந்த திருநங்கை நடிகை என சமீபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், ஹரியானாவை சேர்ந்த பாடகி சங்கீதா கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது சினிமாவை சேர்ந்த இளம் பெண்களுக்கான பாதுகாப்பு பற்றிய கேள்வியை எழுப்பி இருக்கிறது.

12 நாட்களாக மிஸ்ஸிங்
ஹரியானாவைச் சேர்ந்த திவ்யா சினிமாவுக்காக சங்கீதா என தனது பெயரை மாற்றிக் கொண்டு டெல்லியில் வசித்து வந்தார். ஹரியான்வி மொழியில் பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வந்த அவர், தீடிரென கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக காணாமல் போனது பெரும் ஷாக்கிங்காக அமைந்தது. அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

சிதைந்த நிலையில் சடலம்
இந்நிலையில், ஹரியானாவில் உள்ள பைனி பைரன் எனும் கிராமத்தில் ஒரு பெண்ணின் சடலம் எரிந்த நிலையில், கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அந்த சடலம் சங்கீதாவின் சடலமா என பரிசோதிக்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அது அவரது சடலம் தான் என்பது உறுதியானது.

கழுத்தை நெரித்து கொலை
ஹரியானாவை சேர்ந்த ரவி மற்றும் ரோகித் இருவரும் பாடகி சங்கீதாவை மியூசிக் வீடியோ செய்யலாம் என அழைத்து இப்படி கொடூரமாக கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சங்கீதா அந்த இருவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்திருக்கலாம் என்றும் அப்போது அவரது கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பலாத்காரம் செய்தார்களா
பாடகி சங்கீதாவின் உடல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. பிரேத பரிசோதனையின் முடிவில் தான் அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா? இல்லையா? போன்ற தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ரோகித் உடன் சங்கீதா ஹோட்டல் ஒன்றில் உணவு அருந்திய சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.