twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆழ்கடலில் பிரமாண்ட 'நெஸ்ஸி'.. புதிய சோனார் படம் வெளியீடு

    By Shankar
    |

    லாக் நெஸ் (ஸ்காட்லாந்து): டிஸ்னி, ஹங்காமா சேனல்களில் வரும் டோரிமான் காமிக் தொடர் பார்த்திருப்பீர்கள். அதில் டோரிமானும் நோபிட்டாவும் நெஸ்ஸி என்ற பிரமாண்ட கடல் வாழ் உயிரி பற்றிய ஆராய்ச்சிகளை விளக்கி, இன்றும் அந்த உயிரினம் இருப்பாக அடித்துச் சொல்வார்கள்.

    கிட்டத்தட்ட அது உண்மையாகியிருக்கிறது.

    நெஸ்ஸி

    நெஸ்ஸி

    நெஸ்ஸி (Loch Ness Monster) என்பது ஒரு பெரும் கடல்வாழ் உயிரி. ஸ்காட்லாந்தின் லாக் நெஸ் என்ற இடத்தில் ஆழ்கடலில் இந்த உயிரி வாழ்வதாக நம்பப்படுகிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய உயிரினங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் உயிரி இந்த நெஸ்ஸி மட்டும்தான்.

    பல நூறு ஆண்டுகளாக...

    பல நூறு ஆண்டுகளாக...

    கடந்த பல நூறு ஆண்டுகளாக இந்த நெஸ்ஸி பற்றிய பேச்சு, படங்கள் சர்வதேச அளவில் பரவி வருகின்றன. ஆனால் உறுதியான ஆதாரம் என்று எதையும் யாரும் காட்டியதில்லை. காட்டிய ஆதாரங்களை பெரும்பாலானோர் நம்பியதில்லை.

    ஆனாலும் நெஸ்ஸி இருப்பதாக பரவலான பேச்சுகள் உள்ளன. அதுபற்றிய ஆராய்ச்சி இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

    முதல் படம்

    முதல் படம்

    6-ம் நூற்றாண்டிலிருந்தே நெஸ்ஸி பற்றிய பேச்சுகள் நிலவி வருகின்றன. ஆனால் 1934-ம் ஆண்டுதான் முதல் முறையாக நெஸ்ஸியின் படத்தை வெளியிட்டார் டாக்டர் ராபர்ட் கென்னத் வின்ஸ்டன்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    அதன் பிறகு பலமுறை நெஸ்ஸி பற்றிய வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவையனைத்தும் சந்தேகத்துக்கிடமானவையாகவே கருதப்பட்டன. இருந்தாலும் நெஸ்ஸியை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு போட்டது ஸ்காட்லாந்து அரசு.

    சோனார் இமேஜ்

    சோனார் இமேஜ்

    இந்த நிலையில்தான் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படமும், சோனார் இமேஜ் மூலம் கண்டறியப்பட்ட படங்களும் வெளியாகியுள்ளன. லாக் நெஸ் பகுதியில் ஜேக்கோபைட் என்ற கப்பல் பயணத்த போதுதான் அதன் சோனார் கருவி திரையில் நெஸ்ஸி தோன்றியுள்ளது.

    ஆர்வம்

    ஆர்வம்

    லாக் நெஸ் கடற்பரப்பின் அதி ஆழத்தில் இந்த உயிரினம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மிகப் பெரிய இறக்கை போன்ற இரு கால்களும் நீண்ட கழுத்தும், டயனோசர் போன்ற தலையும் கொண்டதாக நெஸ்ஸி உள்ளது.

    நெஸ்ஸி பற்றிய ஓரளவு ஆதாரப்பூர்வமான தகவல்கள் இவை என்பதால், ஆராய்ச்சியாளர்கள் நெஸ்ஸியை நேரில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

      English summary
      New images from the depths of the Loch Ness, in Scotland, have sparked fresh theories that Nessie the monster is lurking there.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X