ஷுட்டிங் முடிஞ்சிடுச்சு...விஜயகாந்த் நடித்தாரா? இல்லையா?...டைரக்டர் சொன்ன ஹாட் நியூஸ்

சென்னை : டைக்டர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆன்டனி நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், பிரனிகி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அன்சு ராஜாமணியுடன் இணைந்து விஜய் ஆன்டனி இசையமைத்து, நடித்துள்ளார்.

ஏற்கனவே விஜய் ஆன்டனி நடித்துள்ள தமிழரசன், அக்னி சிறகுகள், ரதம், பிச்சைக்காரன் 2 என வரிசையாக பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. விரைவில் படத்தின் ரிலீஸ் பற்றியும் அறிவிக்க உள்ளதாக கூறினார்கள்.

முதல் தமிழ் படம்

முதல் தமிழ் படம்

தனித்துவமான கதை அம்சம் கொண்ட படம் என கூறப்படும் மழை படிக்காத மனிதன் படத்தின் பெரும்பாலான பகுதிகள் டையூ மற்றும் டாமன் தீவுகளில் படமாக்கப்பட்டது. இங்கு படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது தான். இந்த படத்தில் சரத்குமார் மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த் மீண்டும் நடிக்கும் படம்

விஜயகாந்த் மீண்டும் நடிக்கும் படம்

இந்த படத்தின் ஹைலைட்டாக ஆரம்பம் முதல் சொல்லப்பட்ட விஷயம், நடிகர் விஜயகாந்த் இந்த படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்பது தான். உடல்நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து ஒதுங்கி, ஓய்வில் இருந்து வருகிறார் விஜயகாந்த். கட்சிப் பணிகளை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகிறார்கள்.

விஜயகாந்த் நடித்தாரா? இல்லையா?

விஜயகாந்த் நடித்தாரா? இல்லையா?

மழைபிடிக்காத மனிதன் படத்தில் விஜய்காந்த் நடிக்கிறார் என்றும், பிறகு நடிக்கவில்லை என்றும் பல தகவல்கள் கூறப்பட்டது. இந்த சமயத்தில் படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜயகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதா, அவர் நடித்து முடித்து விட்டாரா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

டைரக்டர் என்ன சொல்றார்

டைரக்டர் என்ன சொல்றார்

இது பற்றி டைரக்டர் விஜய் மில்டனிடம் கேட்டதற்கு, படம் நன்றாக வந்திருக்கிறது. விஜய் ஆன்டனியுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. விஜய்காந்த் இந்த படத்தில் சில காட்சிகளில் நடிப்பதாக கூறி இருந்தோம். ஆனால் அவர் நடிக்கும் காட்சிகள் இதுவரை படமாக்கப்படவில்லை. தொடர்ந்து அது தாமதமாகி வருகிறது. அவரது உடல்நிலை காரணமாக அவரால் வெளியே வர முடியவில்லை.

காத்துக் கொண்டிருக்கிறோம்

காத்துக் கொண்டிருக்கிறோம்

ஆனால் அவரது பகுதி படத்திற்கு மிகவும் முக்கியமானது. அதனால் நிச்சயம் அவர் நடிக்கும் பகுதிகளை படமாக்குவோம். ஆனால் படத்தில் அவர் நடிப்பாரா அல்லது வெறும் வாய்ஸ் மட்டும் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதற்காக தான் நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

மேகா ஆகாசை பாராட்டிய டைரக்டர்

மேகா ஆகாசை பாராட்டிய டைரக்டர்

மேகா ஆகாஷ் பற்றி கூறுகையில், அவர் மிக முக்கியமான ரோலில் நடித்துள்ளார். அவரது முந்தைய படங்களை விட இதில் மிக சிறப்பாக நடித்துள்ளார். மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என பாராட்டினார் விஜய் மில்டன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X