»   »  தமிழ் ராக்கர்ஸை கதறவிட்டாரா விஷால்?: உண்மை என்ன?

தமிழ் ராக்கர்ஸை கதறவிட்டாரா விஷால்?: உண்மை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ் ராக்கர்ஸை கதறவிட்டாரா விஷால்?: உண்மை என்ன?- வீடியோ

சென்னை: தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால் கையில் காசு இல்லாமல் தமிழ் ராக்கர்ஸ் ஆட்கள் நன்கொடை கேட்கும் ட்வீட்டை சினிமாக்காரர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கி அதன் ஆட்களை சிறையில் தள்ளாமல் விட மாட்டேன் என்று நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸின் ட்வீட் ஒன்றை சினிமாக்காரர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

நன்கொடை

எங்களின் விளம்பரங்களை தமிழ் பட தயாரிப்பாளர் கவுன்சில் முடக்கிவிட்டது. அதனால் எங்களுக்கு நன்கொடை தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் பேபல் கணக்கை ஷேர் செய்வோம். இந்த உலகில் எதுவும் இலவசம் இல்லை.#Tamilrockers #firstdayfirstshow என்று அந்த தமிழ் ராக்கர்ஸ் ஐடி ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிட்

தமிழ் ராக்கர்ஸின் ட்வீட்டை பார்த்த ஒருவர் பிச்சை எடுங்கடா என்றார். அதை பார்த்த தயாரிப்பாளர் சங்கத்தினர், இது துவக்கம் தான் ப்ரோ, அவர்களை அனைத்து இடங்களிலும் பிளாக் செய்வதை பாருங்கள் என்று பெருமையாக தெரிவித்துள்ளனர்.

அடேங்கப்பா

அடேங்கப்பா

அடேங்கப்பா, தலைவரு விஷால் சொன்ன மாதிரியே செய்கிறார். தமிழ் ராக்கர்ஸை பணம் இல்லாமல் அல்லாடவிட்டுவிட்டாரே என்று சிலர் பாராட்டியுள்ளனர்.

ஃபேக் ஐடி

நன்கொடை கேட்டது நாங்கள் அல்ல. ட்விட்டர் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் எங்களுக்கு கணக்கு கிடையாது என்று தமிழ் ராக்கர்ஸ் விளக்கம் அளித்துள்ளது. போலி ஐடியாம்பா...

English summary
Some film personalities are sharing a tweet in which Tamil Rockers is asking for donations as they are left with no money after TFPC suspended their ad campaigns. Looks like the id is not a genuine one.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil