»   »  பிரபாஸ் ஹீரோயினின் படத்திற்காக காத்திருக்கும் டான் தாவூத் இப்ராஹிம்

பிரபாஸ் ஹீரோயினின் படத்திற்காக காத்திருக்கும் டான் தாவூத் இப்ராஹிம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் தங்கையின் வாழ்க்கை வரலாற்று படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் தங்கை ஹசீனா பார்க்கர். தனது கணவர் கொல்லப்பட்டதை அடுத்து டானாக உருவெடுத்து மும்பையில் அதிகாரம் செய்து வந்தார்.

தற்போது அவரது வாழ்க்கை வரலாறு ஹசீனா பார்க்கர் என்ற பெயரில் படமாகியுள்ளது.

ஷ்ரத்தா

ஷ்ரத்தா

ஹசீனா பார்க்கர் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ஹசீனாவாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். டான் தாவூதாக ஷ்ரத்தாவின் அண்ணன் சித்தாந்த் கபூர் நடித்துள்ளார்.

ஹசீனா

ஹசீனா

ஹசீனாவுக்கும் ஷ்ரத்தாவுக்கும் லுக்கில் எந்த ஒற்றுமையுமே இல்லை. அப்படி இருக்க அவரை போய் ஏன் ஹசீனாவாக நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டால் ஹைதர் படத்தை பார்த்தபோது ஷ்ரத்தா தான் ஹசீனா என தீர்மானித்தேன் என்கிறார் இயக்குனர் அபூர்வா லாகியா.

தாவூத்

தாவூத்

தாவூத்தின் தங்கை ஹசீனாவின் போராட்டம் பற்றி பலருக்கு தெரியாது. அதை இந்த படம் மூலம் காண்பித்துள்ளோம் என்கிறார் அபூர்வா லாகியா. இந்த படத்திற்காக ஷ்ரத்தா தனது உடல் எடையை ஏற்றினார்.

பாலிவுட்

பாலிவுட்

ஹசீனா பார்க்கர் படத்தை பாலிவுட் மட்டும் அல்ல நிழல் உலக ஆட்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர். தாவூத்தின் வாழ்க்கையை விட ஹசீனாவின் வாழ்க்கை சுவாரஸ்யமானதாம்.

English summary
Bollywood movie titled Haseena Parker revolving around the life history of Don Dawood Ibrahim's sister has caught the attention of many.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X