For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முதல் படமே அஜித்துடன் தான்...சிவகார்த்திகேயன் பற்றி இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா

  |

  சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள், பிரபலங்கள், திரைத்துறை நண்பர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

  நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களைக் கொண்ட சிவகார்த்திகேயன் வாழ்க்கை, திரைப்பயணம் பற்றிய பலரும் அறியாத சில அரிய தகவல்களை இங்கே பார்க்கலாம். சிவகார்த்திகேயன் பற்றிய இந்த தகவல்கள் பலரையும், அடடே...இதுநாள் வரை இதெல்லாம் தெரியாம போச்சே என ஆச்சரியப்பட வைத்துள்ளது.

  ஆங்கர் டூ பாடலாசிரியர்...இதெல்லாம் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்களா ? ஆங்கர் டூ பாடலாசிரியர்...இதெல்லாம் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்களா ?

  நிகழ்ச்சி தொகுப்பாளர்

  நிகழ்ச்சி தொகுப்பாளர்

  சிவகார்த்திகேயன், விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விஜய் டிவியில் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் சீசன் 2, ஜோடி நம்பர் ஒன் சீசன் 5, ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3, காஃபி வித் சிவா, விஜய் விருதுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

  எஸ்கே.,வின் நிறைவேறாத ஆசை

  எஸ்கே.,வின் நிறைவேறாத ஆசை

  சிவகார்த்திகேயன் தனது அப்பாவை போல் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என விரும்பினார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரின் அப்பா உயிரிழந்ததால், மாமாவின் ஆசைப்படி இன்ஜினியரிங் படித்தார். சினிமா துறையோடு கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்து, இன்று மிகப் பெரிய பிரபலமாக வளர்ந்துள்ளார்.

  முதல் படமே அஜித்துடன்

  முதல் படமே அஜித்துடன்

  சிவகார்த்திகேயனின் முதல் படம் மெரினா என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது இல்லையாம். அவர் முதலில் நடித்த படம் 2008 ல் அஜித் நடித்த ஏகன் படம் தானாம். இதில் அஜித்தின் நண்பராக சிவகார்த்திகேயன் நடித்திருந்தாராம். ஆனால் ஃபைனல் பிரிண்டில் பல காரணங்களால் சிவகார்த்திகேயன் நடித்த சீன்கள் நீக்கப்பட்டதாம்.

  என்ன ஒரு பெரிய மனசு

  என்ன ஒரு பெரிய மனசு

  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை அடுத்து அதன் தயாரிப்பாளர் பி.மதன், சிவகார்த்திகேயனுக்கு ஆடி கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். ஆனால் இதனை வாங்க எஸ்கே மறுத்து விட்டாராம். தயாரிப்பாளரும் விடாமல், இதை பரிசாக இல்லாமல் வெற்றியின் அடையாளமாக நினைத்து ஏற்றுக் கொள்ளும்படி கேட்டாராம். அப்போதும், நான் வாழ்க்கையில் ஒன்றுமே சாதிக்கவில்லை என்று மறுத்துள்ளார் எஸ்கே. கடைசியாக தயாரிப்பாளர் மிகவும் வற்புறுத்தியதால், வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என நினைவுப்படுத்திக் கொள்வதற்காக இந்த காரை ஏற்றுக் கொள்கிறேன் என கூறி வாங்கிக் கொண்டாராம் எஸ்கே.

  எஸ்கே.,வுக்கு இப்படி ஒரு முகமா

  எஸ்கே.,வுக்கு இப்படி ஒரு முகமா

  எப்போதும் சிரித்த முகத்துடன், ஜாலியாக, காமெடி, கலாட்டா என இருக்கும் சிவகார்த்திகேயனை தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ரொம்பவே எமோஷனலான ஆளாம். மனதை பாதிக்கும் சிறு விஷயத்தை கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல், கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் உடனே அழுது விடுவாராம். ரெமோ சக்சஸ் மீட் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் உணர்ச்சிவசப்பட்டு எஸ்கே அழுதுள்ளார்.

  இதெல்லாம் கூட பண்ணுவாரா

  இதெல்லாம் கூட பண்ணுவாரா

  மற்றவர்களை பிராங்க் பண்ணி விளையாடுவது எஸ்கே.,வுக்கு மிகவும் பிடிக்குமாம். அடிக்கடி ஏதாவது செய்து, யாரையாவது பிராங்க் செய்து கொண்டே இருப்பாராம். ரஜினி முருகன் ஷுட்டிங்கின் போது கீர்த்தி சுரேஷை பலமுறை பிராங்க் செய்துள்ளாராம். ஒருமுறை தனது சகோதரியின் மாப்பிள்ளை ரகசியமாக சிகரெட் பிடிப்பதாக பிராங்க் செய்துள்ளார். அதை உண்மை என நம்பி டென்ஷனான எஸ்கேயின் சகோதரிக்கும் அவரது மாப்பிள்ளைக்கும் பெரிய சண்டையே வந்து விட்டதாம்.

  கராத்தே வீரர்

  கராத்தே வீரர்

  எஸ்கே நிஜத்தில் கராத்தே கற்று, அதில் பிளாக் பெல்ட் வாங்கியவராம். அதற்கு காரணம் அவரின் அப்பா தானாம். எஸ்கே கலந்து கொண்ட கராத்தே போட்டியில் சிறப்பு விருந்தினராக அவரின் அப்பா தான் கலந்து கொண்டாராம். இதனால் அவரை கெளரவப்படுத்துவதற்காக எஸ்கே.,விற்கு பிளாக் பெல்ட் கொடுத்து விட்டாராம் அவரின் கராத்தே மாஸ்டர்.

  English summary
  Actor Sivakarthikeyan celebrates his 37th birthday today . Fans and celebrities shared their wishes via social media. On this occasion, we have discussed some unknown facts about Shivakarthikeyan.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X