»   »  'ஆல் இன் அழகுராஜா' கவுண்டமணி பிறந்த நாள்... ரசிகர்கள் வாழ்த்து மழை!

'ஆல் இன் அழகுராஜா' கவுண்டமணி பிறந்த நாள்... ரசிகர்கள் வாழ்த்து மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காமெடி கிங், மகான், ஆல் இன் ஆல் அழகுராஜா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று தனது 77 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

கவுண்டமணி பேசிய பல வசனங்கள் காலம் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் #hbdgoundamani என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் தாண்டி வேறு மொழியில் நடிக்காத கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.ரசிகர்களின் பதிவுகளில் இருந்து ஒருசில வாழ்த்துகளை இங்கே பார்க்கலாம்...

ஆல் இன் அழகுராஜா

கவுண்டமணியின் புகழ்பெற்ற காமெடி வசனத்தை பதிவிட்டு கார்த்திகேயன் கவுண்டமணியை வாழ்த்தியிருக்கிறார்.

வசனங்கள்

கவுண்டமணியின் பல வசனங்கள் இன்றளவும் காலத்தைக் கடந்து நிற்பதை எடுத்துக் கூறி அவரை வாழ்த்தியிருக்கிறார் மனோ.

ரிசல்ட்

இன்று 10 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதற்கும் கவுண்டமணியின் வசனம் பொருந்திப் போவதை ஆச்சரியத்துடன் கூறி கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார் கபாலி.

சினிமாவில்

சினிமாவில் இருந்து கொண்டு சினிமாத் துறையினரை கிண்டலடிக்க இவரால் தான் முடியும் என்று பதிவிட்டு கவுண்டமணியை வாழ்த்தியிருக்கிறார் கார்த்திக்.

இரட்டை வசனம்

இரட்டை வசனம் இல்லாமல் மக்களை மகிழ்வித்தவர் என்று யோகி வாழ்த்தியிருக்கிறார்.

இதுபோல ஏராளாமான ரசிகர்கள் வாழ்த்துவதால் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது #hbdgoundamani ஹெஷ்டேக்.

English summary
Actor Goundamani Today Celebrate his 77th Birthday. Now #hbdgoundamani Hashtag Trending in Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil