»   »  'நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா'... இசைஞானி பிறந்தநாளுக்கு ரசிகர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்து!

'நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா'... இசைஞானி பிறந்தநாளுக்கு ரசிகர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையுலகில் 1௦௦௦ படங்களைத் தாண்டிய இசைஞானி இளையராஜா இன்று தனது 73 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

'மச்சானைப் பார்த்தீங்களா' என்று அன்னக்கிளியில் தொடங்கிய இவரின் இசைப்பயணம் தாரை தப்பட்டை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.

40 வருடங்களில் 1௦௦௦ படங்களுக்கு மேல் இசையமைத்து உலக சாதனை படைத்திருக்கும் இசைஞானியின் பிறந்தநாளை, தேசிய அளவில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களின் வாழ்த்து மழையில் இருந்து ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.

அம்மா பாடல்கள்

இளையராஜா இசையமைத்த அம்மா குறித்த பாடல்கள் காலத்தால் என்றுமே அழியாது என்று கூறி இசைஞானியை வாழ்த்தியிருக்கிறார் அரவிந்த்.

தென்மதுரை

ரஜினி-பிரபு இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் படத்தின் பாடல் வரிகளைப் பகிர்ந்து இசைஞானியை வாழ்த்தியிருக்கிறார் தினேஷ்.

நேற்று இல்லை

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே நீ ராஜா என்று இசைஞானியின் பாடல் வரிகளைக் கொண்டே அவரை வாழ்த்தியிருக்கிறார் பார்த்தி.

ரேடியோ

ரேடியோவைக் கண்டுபிடித்தது மார்க்கோனியாக இருந்தாலும் அதில் இசையைக் கொடுத்தது இசைஞானி தான் என்று வாழ்த்தியிருக்கிறார் சேம்பிய சோழன்.

மூன்றாம் பிறை

மூன்றாம் பிறை படத்தின் பாடல் வரிகளைப் பகிர்ந்து இசைஞானியை வாழ்த்தியிருக்கிறார் யோதா.

தென்றல் வந்து

அவதாரம் படத்தில் இடம்பெறும் 'தென்றல் வந்து தீண்டும்போது' பாடலை வைத்து பெரும்பாலான ரசிகர்கள் இசைஞானியை வாழ்த்தி வருகின்றனர்.

இதுபோல ஏராளமான ரசிகர்கள் இசைஞானியை இடைவிடாது வாழ்த்தி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜா சார்...

English summary
Today Music Composer Ilayaraja Celebrates his 73rd Birthday. Now #hbdilayaraja and #hbdrajasir Trend Nationwide in All Social Networks.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil