»   »  'தலயின் தங்கமகனே தமிழ்நாட்டின் இளவரசனே'.. அஜீத் மகனைக் கொண்டாடும் ரசிகர்கள்

'தலயின் தங்கமகனே தமிழ்நாட்டின் இளவரசனே'.. அஜீத் மகனைக் கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நடிகர் அஜீத்- ஷாலினி தம்பதிகளின் செல்ல மகன் ஆத்விக் குமார் தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

ஆத்விக்கின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என்று பல்வேறு செயல்களில் அஜீத் ரசிகர்கள் களமிறங்கி உள்ளனர்.

மேலும் விதவிதமாக போஸ்டர்களை உருவாக்கி சமூக வலைதளங்களை, வழக்கம் போல தங்கள் பாணியில் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கும் #hbdkuttythalaaadvik மற்றும் #kuttythala ஹெஷ்டேக்குகளில் இருந்து ஒருசில வாழ்த்துகளை பார்க்கலாம்.

ஜாதகம்

ஜாதகம் பார்க்காம ஊரே ஒண்ணா சேர்ந்து குட்டிதலன்னு பேர் வச்சிட்டாங்க' என்று கூறி வாழ்த்தியிருக்கிறார் சத்யா.

தமிழ்நாட்டின் இளவரசன்

தமிழ்நாட்டின் இளவரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார் திரு.

வீர விநாயகா

வேதாளம் படத்தில் இடம்பெற்ற வீர விநாயகா பாடல் வரிகளைப் பகிர்ந்து, ஆத்விக்கிற்கு வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார் ராஸ்கல் சிவா.

எங்கள் வீட்டுப் பிள்ளை

எங்கள் வீட்டுப்பிள்ளை ஆத்விக் என்று பட்டம் கொடுத்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் சண்டியர்.

உனக்கில்லை எல்லை

இந்த உலகில் உனக்கில்லை எல்லை என்று ஆத்விக்கை வாழ்த்தியிருக்கின்றனர் அடங்காத மதுரை குரூப்ஸ்.

நாடு நகரம் போற்றும்

நாடு நகரம் போற்றும் எங்கள் குட்டி தல' என்று பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார் சசி.

ஆசை நாயகன்

ஆசை நாயகன் அஜீத்தின் இளவரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார் சின்னப்பன்தாஸ்.

அப்பாவின் குணத்தோடு

உன் அப்பாவின் குணத்தோடு வாழ வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார் அஞ்சாதவன்.

இதுபோல மேலும் பல ரசிகர்களின் வாழ்த்துக்களால் ட்விட்டரில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது #hbdkuttythalaaadvik ஹெஷ்டேக்,

English summary
Ajith Fans Start Birthday Celebrations for Kutty Thala Aadvik Ajith Kumar. Now #hbdkuttythalaaadvik Hashtag Trending in All Social Networks.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil