»   »  31வது பிறந்த நாளைக் கொண்டாடும் எங்க வீட்டுப் பிள்ளை, சங்கத் தலைவர்... போஸ் பாண்டி!

31வது பிறந்த நாளைக் கொண்டாடும் எங்க வீட்டுப் பிள்ளை, சங்கத் தலைவர்... போஸ் பாண்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தனது 31 வது பிறந்தநாளில் நடிகர் சிவகார்த்திகேயன் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் போட்டிபோட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனால் #HBDsivakarthikeyan என்ற ஹெஷ்டேக் தற்போது இந்தியளவில் தொடர்ந்து ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் சிலரின் வாழ்த்துகளை பார்க்கலாம்.

சங்கத் தலைவரே

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி என்று கூறிய இமான் தொடர்ந்து நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் சங்கத் தலைவரே" என்று வாழ்த்தியிருக்கிறார்.

வாழ்க்கை முழுவதும்

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன் உங்கள் வாழ்க்கை முழுவதும் வெற்றியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கட்டும்" என்று அனிருத் வாழ்த்தியிருக்கிறார்.

அதிரடியை தொடர

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன். கடவுளின் ஆசிர்வாதங்களுடன் உங்கள் அதிரடி தொடரட்டும்" என்று தனுஷ் வாழ்த்தியிருக்கிறார்.

எங்கள் வீட்டுப் பிள்ளை

"எங்கள் வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று வாழ்த்தியிருக்கிறார் செல்வா.

சிலுக்குவார்பட்டி

"சிலுக்குவார்பட்டியின் சிகரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று வாழ்த்தியிருக்கிறார் ஜெயராணி.

60 நாள்ல ஆடி கார்

"எண்ணி 60 நாளுல ஆடி கார்ல போவிங்க.இந்த ஊரே உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்" என்று ரஜினிமுருகன் பாணியில் வாழ்த்தியிருக்கிறார் செல்வயுவன்.

அதிர்ஷ்டம்+திறமை

"லக்கும் கூடவே கொஞ்சம் திறமையும் இருந்தா போதும் நிச்சயம் வெற்றி பெறலாம்ன்னு நிரூபிச்ச மனுஷன்" என்று சிவகார்த்தியை வாழ்த்தியிருக்கிறார் கோகிலா.

இதுபோல மேலும் பல வாழ்த்துக்களால் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது #HBDsivakarthikeyan.

English summary
Actor Sivakarthikeyan Today Celebrating His 31st Birthday. Now #HBDsivakarthikeyan Hashtag Trending in Twitter Page.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos