»   »  தனுஷ் எதிர்ப்பை ஏற்ற மதுரை ஹைகோர்ட்.. மகன் என சொந்தம் கொண்டாடிய தம்பதி மனு டிஸ்மிஸ்

தனுஷ் எதிர்ப்பை ஏற்ற மதுரை ஹைகோர்ட்.. மகன் என சொந்தம் கொண்டாடிய தம்பதி மனு டிஸ்மிஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: நடிகர் தனுஷை தங்கள் மகன் என மேலூர் தம்பதியர் உரிமைகோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது.

தனுஷ் தங்கள் மூத்த மகன் எனவும், அவர் மாதந்தோறும் தங்களுக்கு ரூ 65 ஆயிரம் தர உத்தரவிட வேண்டும் எனவும் மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

HC dismisses case against Dhanush

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தனுசின் அங்க அடையாளம் சரி பார்க்கப்பட்ட நிலையில், சான்றிதழ்களில் குளறுபடி இருப்பதால், டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கதிரேசன் தம்பதி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை 10 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், தனுஷ் தங்கள் மகன் என்று கதிரேசன் - மீனாட்சி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிடப்பட்டது.

English summary
The Madras High Court Madurai Bench has dismissed the parental right case against Dhanush sued by Melur couple

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil