»   »  எந்திரன் பட வழக்கு: சன் பிச்சர்ஸுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம்!

எந்திரன் பட வழக்கு: சன் பிச்சர்ஸுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எந்திரன் படத்தின் கதை வழக்கில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Select City
Buy Aithe 2.0 (A) Tickets

எந்திரன் படம் தன் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறி, காப்புரிமைச் சட்டத்தின்படி தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர், கலாநிதி மாறன் மற்றும் சன் பிச்சர்ஸ் ஆகியோருக்கு எதிராக ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.


HC fines Sun Pictures Rs 25000 in Enthiran case

ஆனால் வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தது சன் பிக்சர்ஸ். இதைத் தொடர்ந்து சன் பிச்சர்ஸ் தோன்றாத் தரப்பினராக அறிவித்து 29.10.2015 அன்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து ஆரூர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது பிரமான வாக்குமுலத்தையும், ஆவணங்களையும் சமர்பித்தார்.


இந்த நிலையில், தம்மை தோன்றாத் தரப்பினராக அறிவித்ததை நீக்கி உத்தரவிடும்படி கலாநிதி மாறன் மற்றும் சன் பிச்சர்ஸ் மனு செய்திருந்தனர். இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது சுமார் 5 வருடங்களுக்கு மேலாக எந்த பதிலையும் தாக்கல் செய்யாததைக் கண்டித்த நீதிமன்றம், சன் பிக்சர்ஸுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. இந்தத் தொகையை 8.6.2016க்குள் மானாமதுரை தொழு நோயாளிகள் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.

English summary
The Madras High Court has fined Sun Pictures Rs 25000 for not appearing the case for 5 years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil