»   »  'கடவுள் இருக்கான் குமாரு’ ரிலீஸுக்கு தடை இல்லை... நீதிமன்றம் உத்தரவு! #KadavulIrukkanKumaru #KIK

'கடவுள் இருக்கான் குமாரு’ ரிலீஸுக்கு தடை இல்லை... நீதிமன்றம் உத்தரவு! #KadavulIrukkanKumaru #KIK

Posted By:
Subscribe to Oneindia Tamil

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிப்பில் இந்த வாரம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது 'கடவுள் இருக்கான் குமாரு' படம். இந்த படத்துக்கு தடை கேட்டு 'லிங்கா' சிங்காரவேலன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். லிங்கா நஷ்டத்தில் வேந்தர் மூவிஸ் மதனின் பங்கை டி.சிவாதான் தர வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லி இருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் பத்தாம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தது.

HC gives green Signal to Kadavul Irukkan Kumaru release

ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று இன்று மீண்டும் தனி வழக்கு போட்டார். விசாரணைக்கு வந்தபோது, 'இந்த வழக்கை அவசரமாக எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்தாம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்,' என்று உத்தரவிட்டுவிட்டது.

இதுகுறித்துப் பேசிய தயாரிப்பாளர் டி சிவா, "இதன் மூலம் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை தடுக்க செய்யப்பட்ட சதி உடைக்கப்பட்டது. கடவுள் இருக்கான் குமாரு டைட்டில் போலவே கடவுள் 'அம்மா கிரியேஷன்ஸ்' பக்கம் உள்ளார்...", என்றார்.

English summary
The Madras High Court has gave green signal for the release of Kadavul Irukkan Kumaru movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil