»   »  விஷால் சஸ்பென்டை உடனே நீக்குங்க! - தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயர் நீதிமன்றம் ஒரு நாள் கெடு

விஷால் சஸ்பென்டை உடனே நீக்குங்க! - தயாரிப்பாளர் சங்கத்துக்கு உயர் நீதிமன்றம் ஒரு நாள் கெடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷாலை தற்காலிக நீக்கம் செய்துள்ளதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இதற்கு ஒரு நாள் அவகாசம் அளிப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பத்திரிகைப் பேட்டியில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை தவறாகப் பேசியதாகக் கூறி, நடிகர் விஷாலை சஸ்பென்ட் செய்வதாக தயாரிப்பாளர் சங்க அவசரக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

HC orders producers council to revoke the suspension of Vishal

இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் விஷால்.

இந்த வழக்கில் முதலில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு சரியானதுதான் என்று அறிவித்தது நீதிமன்றம்.

பின்னர் வழக்கை விசாரித்த பிறகு, "விஷால் மீது எடுக்கபட்ட நடவடிக்கையை தயாரிப்பாளர் சங்கம் தானாக முன் வந்து ரத்து செய்ய வேண்டும். விஷால் கூறிய கருத்தை மிகைபடுத்தி புரிந்து கொண்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம். ரத்து செய்யவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். இதற்கு ஒரு நாள் கெடு விதிப்பதாக" உத்தரவிட்டுள்ளது.

English summary
The Madras High Court ordered Producers Council to revoke the suspension on actor - producer Vishal.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil