»   »  கிரகலட்சுமி: வழக்கு ரத்தில்லை!

கிரகலட்சுமி: வழக்கு ரத்தில்லை!

Subscribe to Oneindia Tamil


கிரகலட்சுமி தன்னை மோசடி செய்து திருமணம் கொண்டதாக கூறி நடிகர் பிரஷாந்த் தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய முடியாது சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Click here for more images

இதுதொடர்பாக கிரகலட்சுமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது.

நடிகர் பிரஷாந்த் மற்றும் மனைவி கிரகலட்சுமி இருவரும் பல மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். முதலில் தன்னுடைய மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார் பிரஷாந்த்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கிரகலட்சுமிக்கு ஏற்கனவே வேணு நாராயணன் பிரசாத் என்பவருடன் திருமணமாகி விட்டதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டார் பிரஷாந்த்.

மேலும், தனது முதல் திருமணத்தை மறைத்து மோசடியாக தன்னை 2வதாக திருமணம் செய்து கொண்டு விட்டார் கிரகலட்சுமி. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கிரகலட்சுமி, அவரது பெற்றோர், சகோதரர்கள், திருமணத்துக்கு ஏற்பாடு செய்த டாக்டர் ரங்கபாஷ்யம் உள்ளிட்ட 8 பேரை எதிரிகளாக சேர்த்திருந்தார் பிரஷாந்த்.

இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி கிரகலட்சுமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி ஜெயபால் விசாரித்தார். பதில் மனு தாக்கல் செய்யுமாறு பிரஷாந்த்துக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பிரஷாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், கிரகலட்சுமிக்கு எனக்கு முன்பாகவே கல்யாணம் நடந்தது உண்மைதான். அதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.

மேலும் என்னிடம் ரூ. 50 லட்சம் தர வேண்டும் என்று கேட்டும் மிரட்டினார் என்று விளக்கியிருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிரகலட்சுமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தார். இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் உள்ளது. எனவே வழக்கை தள்ளுபடி செய்யவோ அல்லது தடை விதிக்கவோ முடியாது என்று உத்தரவிட்டார்.

அதேசமயம், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி டாக்டர் ரங்கபாஷ்யம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி அறிவித்தார்.

Read more about: grahalaxmi, prashanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil