»   »  பீப் சிம்புவின் கோரிக்கை மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!

பீப் சிம்புவின் கோரிக்கை மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பீப்' பாடல் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக சென்னை போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

'பீப்' பாடல் விவகாரத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சிம்பு மீது சென்னையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

HC rejects Simbu's new petition

இதில், கோவையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு சார்பில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனு குறித்து போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், தனக்கு எதிராக சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி சிம்பு மற்றொரு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதி சுப்பையா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு வக்கீல் எஸ். சண்முக வேலாயுதம் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதி, சிம்புவின் மனு குறித்து பதிலளிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

English summary
The Madras High Court has rejected Simbu's plea to cancel the case registered by Chennai police against him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil