»   »  'காளி' படத்தை திரையிட தடையில்லை. ஆனால்.. - ஐகோர்ட் உத்தரவு

'காளி' படத்தை திரையிட தடையில்லை. ஆனால்.. - ஐகோர்ட் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
தயாரிப்பாளரை ஏமாற்றிய விஜய் அந்தோணியும் அவரது மனைவியும்-வீடியோ

சென்னை : விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் திரைப்படம் 'காளி'.

விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கும் 'காளி' படத்தில் சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

HC removes kaali ban with condition

இந்நிலையில், வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் 'காளி' படத்திற்குத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'அண்ணாதுரை' படத்தால் அலெக்சாண்டருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட 'காளி' படத்தை குறைந்த பணத்துக்கு தருவதாக ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதற்கு அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட தொகையையும் கொடுத்துள்ளார் அலெக்சாண்டர். ஆனால், தொடர்ந்து சினிமா ஸ்ட்ரைக் காரணமாக பாக்கி பணத்தை தர முடியவில்லை. இந்நிலையில், ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார் விஜய் ஆண்டனி.

இதனால், கோர்ட் படியேறிய அலெக்சாண்டர், 'அண்ணாதுரை' படத்தினால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்திவிட்டு 'காளி' படத்தை திரையிட உத்தரவிடவேண்டும் எனக் கோரினார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 'காளி' படத்திற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி விஜய் ஆண்டனி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விஜய் ஆண்டனிக்கு நிபந்தனையுடன் படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

வில்லியம் அலெக்சாண்டரின் பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்கு ரூபாய் 2 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தைச் செலுத்திவிட்டு படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

English summary
Vijay Antony appealed to stop the ban for 'Kaali' movie. In this case, Chennai High Court gives the permission to release the film with condition.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X