»   »  கார் வாங்க லோன் பெற்று படம் எடுத்த இயக்குனர்.. வேளச்சேரி எஸ்பிஐ வங்கியில் நடந்த 'ஹேக்கிங்' மோசடி!

கார் வாங்க லோன் பெற்று படம் எடுத்த இயக்குனர்.. வேளச்சேரி எஸ்பிஐ வங்கியில் நடந்த 'ஹேக்கிங்' மோசடி!

Written By: Shyam
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளச்சேரி எஸ்பிஐ வங்கியில் இயக்குனர் ஒருவர் கார் வாங்க லோன் பெற்று அந்த பணத்தை வைத்து படம் எடுத்து இருக்கிறார். இதன் மூலம் எடுக்கப்பட்ட 'அருவா சண்ட' என்ற படம் தற்போது தற்காலிக தடை பெற்று இருக்கிறது.

மொத்தமாக 13 பேரின் மீது தற்போது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. படத்தின் இயக்குனர், வங்கியில் உள்ள சித்ரா என்ற லோன் பரிந்துரைக்கும் அதிகார ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் ராஜா என்பவர்தான் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். அவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 கோடி ரூபாய்

3 கோடி ரூபாய்

பல்வேறு கார்களை அலுவலக பயன்பாட்டிற்காக வாங்க வேண்டும் என்று ராஜா வேளச்சேரி எஸ்பிஐ வங்கியில் லோன் வாங்கி இருக்கிறார். 3.30 கோடி ரூபாய் லோன் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான விவரங்களை பார்த்துவிட்டு சித்ரா என்ற லோன் பரிந்துரைக்கும் அதிகாரி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.

சந்தேகம்

சந்தேகம்

இந்த நிலையில் வங்கியின் இயக்குனர் சில நாட்களுக்கு பின் சந்தேகம் எழுந்து லோன் விவரங்களை சோதனை செய்து இருக்கிறார். அப்போது அந்த லோன் வாங்க கொடுக்கப்பட்ட விவரங்கள் பல பொய்யாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹேக் செய்தார்

ஹேக் செய்தார்

இந்த நிலையில் சித்ரா வங்கி லோன் வழங்கும் சாப்ட்வேரை ஹேக் செய்து இருக்கிறார். இதன் மூலமே அவர் ராஜாவிற்கு எளிதாக லோன் கிடைக்க வகை செய்து இருக்கிறார்.

படத்திற்கு தடை

படத்திற்கு தடை

இந்த நிலையில் தற்போது படத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் மாளவிகா மேனன் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.

English summary
HC stalls Aruva Sanda for SBI scam case. Producer of the film Raja got loan from bank to get the Car, but he produced film using that money.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil