»   »  கெத்து வரிவிலக்கு.... தனி நீதிபதி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

கெத்து வரிவிலக்கு.... தனி நீதிபதி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கெத்து படத்துக்கு வரி விலக்கு அளிக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்துக்கு வரி விலக்கு அளிக்க கோரி இந்த திரைப்படத்தை தயாரித்த ரெட் ஜெயின்ட் மூவி நிறுவனம் தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்தது.


HC stays tax exemption for Geththu

இந்த மனுவை பரிசீலித்த தமிழக அரசு, ‘கெத்து' என்பது தமிழ் சொல் அல்ல. அதனால் வரி விலக்கு சலுகை வழங்க முடியாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, 'கெத்து' என்பது தமிழ் சொல்தான். எனவே, வரிவிலக்கு அளிக்க மறுத்த தமிழக அரசு உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்கவேண்டும்,' என்று உத்தரவிட்டார்.


இந்த உத்தரவை எதிர்த்து வணிக வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிருபாகரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி வாதிட்டார்.


இதையடுத்து நீதிபதிகள், 'கெத்து' படத்துக்கு வரி விலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி துரைசாமி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

English summary
The Madras High Court has stayed the order for granting tax benefits to Udhayanidhi's Geththu movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil