twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்யராஜிற்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மாதிரி அவர் எனக்கு கொடுத்தது இருக்கு... சிவகார்த்திகேயன் நெகழ்ச்சி

    |

    சென்னை: தெலுங்கு இயக்குநர் அனுதிப் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் நடிகை மரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பிரின்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.

    தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்தப் படத்திற்கு தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை இருப்பதால் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

    க்யூட்டா பேட்டை புடிச்சு..கிரிக்கெட் விளையாடிய நடிகை அஞ்சலி..ரசித்து பார்க்கும் பேஃன்ஸ்!க்யூட்டா பேட்டை புடிச்சு..கிரிக்கெட் விளையாடிய நடிகை அஞ்சலி..ரசித்து பார்க்கும் பேஃன்ஸ்!

    இந்நிலையில் பல சுவாரசியமான விசயங்களைப் பற்றி சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

    வருத்தப்படாத பிரின்ஸ்

    வருத்தப்படாத பிரின்ஸ்

    என்னுடைய படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அனைவருக்கும் பிடித்தமான படம் என்று நம்புகிறேன். அந்தப் படத்திற்கும் பிரின்ஸ் திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது. இரண்டுமே நகைச்சுவையான படங்கள்தான், எனினும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் குழந்தை திருமணம் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக அதில் கருத்து சொல்லப்பட்டது. பிரின்ஸ் படத்திலும் மனித நேயத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து ஒரு சீரியஸான விஷயத்தை கையாண்டுள்ளார் அனுதீப்.

    ரஷ்யா உக்ரைன் போர்

    ரஷ்யா உக்ரைன் போர்

    இந்தப் படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்திற்காக கிட்டத்தட்ட 150 நபர்களை ஆடிஷன் செய்தார் இயக்குநர். அதில் உக்கரைன் நாட்டைச் சேர்ந்த மரியாதான் தேர்வானார். அந்த நாட்டில் அவர்களுடைய மொழியைத்தான் அதிகம் பேசுவார்கள். ஆங்கிலம் கூட சரிவர தெரியாது. ரஷ்யாவிற்கும் உக்கிரேனிற்கும் போர் நடந்து கொண்டிருந்தபோது, தனது குடும்பம் அங்கு கஷ்டத்தில் இருந்தபோது, கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, விமான நிலையங்கள் அனைத்தும் மூடுவதற்கு ஒரு நாளைக்கு முன்பாகவே மரியா இங்கு கிளம்பி வந்துவிட்டார். தன்னுடைய துயரத்தை எதுவும் வெளிக்காட்டாமல் சிறப்பாக நடித்தும் கொடுத்தார்.

    வெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு

    நகைச்சுவை திரைப்படம் என்பதால் ஒரு நகைச்சுவை நடிகர் வில்லனாக நடித்தால் எப்படி இருக்கும் என்று இயக்குநர் அனுதீப் பிரேம்ஜியை வில்லனாக தேர்ந்தெடுத்தார். காரணம் அவர் வெங்கட் பிரபு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர். நானும் முதலில் யோசித்தேன் ஆனால் பிரேம்ஜி சிறப்பாக நடித்துள்ளார். நான் நடிக்க ஆரம்பித்த பொழுது இயக்குநர் வெங்கட் பிரபு படங்களில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறேன். இப்போது பிரேம்ஜியுடன் பணி புரிந்துவிட்டேன். அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் பணிபுரிய போகிறேன் என்று கூறியுள்ளார்.

    சத்யராஜ் முத்தம்

    சத்யராஜ் முத்தம்

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கும் பிரின்ஸ் திரைப்படத்திற்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் நடிகர் சத்யராஜ். ஜாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் தன் மகன் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு புரட்சியான தந்தை வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நான் அவருடைய மிகப் பெரிய ரசிகன். இந்த நிகழ்ச்சியில் அவர் எனக்கு கொடுத்த முத்தத்தை நான் பெரிதும் மதிக்கிறேன். எம்.ஜி.ஆர் அவர்கள் சத்யராஜ் சாருக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். அதே போலத்தான் இப்போது அவர் எனக்கு கொடுத்த முத்தமும் என்று சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

    English summary
    Directed by Telugu director Anudeep, the movie Prince starring actors Sivakarthikeyan, Sathyaraj and actress Maria has released today. The film, which is releasing on the occasion of Diwali holiday, has got a good opening as there are five consecutive days off. In this case, Sivakarthikeyan has talked about many interesting things in a program.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X