Don't Miss!
- News
அக்கு அக்கா உடையுதே "அச்சாணி".. எடப்பாடிக்கு விழுந்த "அடி".. இவ்ளோ இருக்கா.. திரும்புதா அதே ஹிஸ்டரி
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிரைவேட் பார்ட்டை காட்டி மார்க் போட சொன்னவரு இப்போ பிக் பாஸ் போட்டியாளரா? பிரபல நடிகை காட்டம்!
மும்பை: பிரைவேட் பார்ட்டை தன்னிடம் காட்டி 0 முதல் 10 வரை ரேட்டிங் போட சொல்லி பாலியல் தொல்லை கொடுத்த காமக் கொடூரன் எப்படி பிக் பாஸ் போட்டியாளராக மக்கள் பார்க்கும் ஒரு பிரபல ஷோவில் இடம் பெறலாம்? என சல்மான் கானையும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் விளாசி உள்ளார் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா.
பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகையான ஷெர்லின் சோப்ரா பிக் பாஸ் சீசன் 16ல் போட்டியாளராக சல்மான் கான் அறிமுகப்படுத்தியுள்ள பிரபல இயக்குநர் சஜித் கான் குறித்து ஏற்கனவே மீடூவில் புகார் அளித்திருந்தார்.
10க்கும் மேற்பட்ட பெண்கள் சஜித் கானுக்கு எதிராக முன்னதாகவே புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“நேத்து
ராத்திரி
எம்மா“மழையில்
ஆட்டம்
போட்ட
ஜிபி
முத்து..பிக்
பாஸ்
வீட்டில்
மாஸ்
காட்டுறாரே?

பிக் பாஸ் சீசன் 16
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 ஆரம்பமான நிலையில், இந்தியிலும் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் இந்தி சீசன் 16 நிகழ்ச்சி ஆரம்பம் ஆகி உள்ளது. அதில் போட்டியாளராக அறிமுகமாகி உள்ள பாலிவுட் இயக்குநர் சஜித் கானுக்கு (ஃபரா கானின் சகோதரர்) எதிராக பாலிவுட் நடிகை ஷெரின் கான் உள்ளிட்ட பலர் கொந்தளித்துள்ளனர்.

யாரு இந்த சஜித் கான்
2006ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்த தர்ணா ஜரூர் ஹை படத்தின் மூலம் பாலிவுட் இயக்குநர் ஆனவர் தான் சஜித் கான். இந்தியளவில் புகழ்பெற்ற ஹவுஸ்ஃபுல் படத்தின் 1,2 மற்றும் 4வது பாகத்தை இயக்கியவர் இவர். நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் இவர் மீது எழுப்பப்பட்டது. மீடூவில் இவர் பெயர் பெரிதளவில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

காமசூத்ரா நடிகை
பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா காமசூத்ரா 3டி படத்தில் நடித்திருந்தார். மேலும், பல எரோட்டிக்கா படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் சஜித் கான் தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தினார் என மீடூ சர்ச்சை வெடித்த நிலையில், வெளிப்படையாக தானும் பாதிக்கப்பட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆண்குறிக்கு ரேட்டிங்
இயக்குநர் சஜித் கான் தனது ஆண்குறியை காட்டி 0 முதல் 10 வரை ரேட்டிங் கொடுக்க சொல்லி பாலியல் தொல்லை கொடுத்தார். நானும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போய், அவருக்கு ரேட்டிங் கொடுக்க காத்திருக்கிறேன். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் கொடூரர்கள் எல்லாம் எப்படித்தான் பிக் பாஸ் வீட்டுக்கு போகிறார்களோ? என கேள்வி எழுப்பி உள்ளார்.

சல்மான் கான் கேட்கமாட்டாரா
சல்மான் கான் தனது நிலைபாட்டை இப்ப கூட சரியான முறையில் எடுக்க மாட்டாரா? எப்படி ஒரு காமக் கொடூரரை பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக அறிமுகப்படுத்துவாரு என நடிகர் சல்மான் கானையும் விளாசி உள்ளார் ஷெர்லின் சோப்ரா. இவரது ட்வீட் தற்போது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.