அவர் 30 வருஷமா பான் இந்தியா படம் எடுக்குறார்...யாரை புகழ்ந்து பேசினார் சூர்யா?
சென்னை : தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் நடிகராக மாறி விட்டார் சூர்யா. ஒரு பக்கம் சூரரைப் போற்று ரீமேக் ஆகி வரும் வேளையில் மற்றொரு புறம் அந்த படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
இதற்கிடையில் சூர்யா அடுத்தடுத்து நடிக்கும் படங்களும் கவனம் ஈர்த்து வருகின்றன. வாடிவாசல், வணங்கான், சூர்யா 43 என வரிசையாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்களும் ஹிட்டாகி வருகின்றன.
சூர்யா நடிக்கும் படங்கள் மட்டும் இல்லாமல் அவர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்கள், தயாரிக்கும் படங்கள் என அனைத்துமே அனைவரின் ஆர்வத்தையும் பல மடங்காக அதிகரிக்க செய்து வருகிறது. சூர்யாவின் நடிப்பை கமலே மனம் திறந்து பாராட்டி வருகிறார்.

மதுரையில் விருமன் விழா
இந்த சமயத்தில் சமீபத்தில் மதுரையில் நடந்த விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்து கொண்டார். கார்த்தி, அதிதி ஷங்கர் லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படம் ஆகஸ்ட் 12 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

நடிப்பின் நயகன் சூர்யா
இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட சூர்யாவை பார்த்து ரசிகர்கள், ரோலக்ஸ்...ரோலக்ஸ் என கூச்சலிட துவங்கி விட்டனர். மேடையில் பேசியவர்களும் சூர்யாவை, நடிப்பின் நாயகன் என சொல்லி புகழ்ந்தார்கள். இந்த சமயத்தில் இந்த விழாவில் சூர்யா பேசியது தற்போது செம டிரெண்டாகி வருகிறது.அதுவம் டைரக்டர் ஷங்கர் பற்றி சூர்யா பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

30 வருஷமா பான் இந்தியா படம் பண்றார்
விழாவில் பேசிய சூர்யா, டைரக்டர் ஷங்கர் சார் 30 பல வருடங்களுக்கு முன்பே எப்படி பான் இந்தியா படம் இயக்க வேண்டும் என எங்களுக்கு காட்டி விட்டார். அவர் 30 வருடங்களாக பான் இந்தியா படங்களை இயக்கி வருகிறார். அவரது படங்களால் இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பவர். அவரது படங்களை சுற்றி எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.

இந்தியாவே அவர் படத்திற்காக காத்திருக்கு
கடந்த சில ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இருந்தாலும் இப்போதும் கூட ஒட்டுமொத்த இந்தியாவும் அவரது படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது. அவர் இயக்கும் இந்தியன் 2, ராம் சரணின் ஆஸ்சி 15 படங்கள் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

ஒரே நேரத்தில் 2 படங்கள்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்து வந்த இந்தியன் 2 படம் 2020 ம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 ஷுட்டிங் செப்டம்பர் 15 ம் தேதி மீண்டும் துவங்கப்பட உள்ளது. மற்றொரு புறம் ஷங்கர் தற்போது இயக்கி வரும் ராம் சரணின் ஆர்சி 15 அரசியல், த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இதில் ராம் சரண் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











