»   »  அவருக்கு என் மீது சந்தேகமே வரவில்லை: கிருத்திகா உதயநிதி

அவருக்கு என் மீது சந்தேகமே வரவில்லை: கிருத்திகா உதயநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய் ஆண்டனியும் கிருத்திகா உதயநிதியும் பெஸ்ட் பிரெண்ட்ஸ்.

சென்னை: விஜய் ஆண்டனிக்கு தன் மீது சந்தேகமே வரவில்லை என்று இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை இயக்கியுள்ளார் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின். வித்தியாசமான படங்களாக தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி கிருத்திகா படத்தில் நடித்துள்ளார் என்றால் அது நிச்சியமாக வித்தியாசமான கதையாகத் தான் இருக்க வேண்டும்.

இந்நிலையில் படம் குறித்து கிருத்திகா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

காளி

காளி

வணக்கம் சென்னை படத்தை அடுத்து புது படத்தை துவங்குவது தான் பெரிய விஷயமாக இருந்தது. அந்த படத்திற்கு பிறகு பல கதைகள் எழுதினேன். இறுதியில் காளி கதையுடன் விஜய் ஆண்டனியை சந்தித்தேன்.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். அப்படி இருக்கும்போது அவருக்கு என் கதையை கேட்டதும் பிடித்துவிட்டது. நடிப்பதுடன் நானே தயாரிக்கவும் செய்வதாக கூறினார்.

கிருத்திகா

கிருத்திகா

நானும், விஜய் ஆண்டனியும் தற்போது நண்பர்களாகிவிட்டோம். படம் சிறப்பாக வர அவர் எனக்கு பல ஐடியா கொடுத்துள்ளார். காளி கிராமத்து கதை. கிராமம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் விஜய் கொடுத்த தகவல்கள் மிகவும் உதவியாக இருந்தது.

நடிகர்

நடிகர்

வழக்கமாக இயக்குனர் தான் நடிகரின் வீட்டிற்கு சென்று கதை சொல்வார். ஆனால் விஜய் என் வீட்டிற்கு வந்து கதை கேட்டார். என் ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்டில் காளி என்ற கதாபாத்திரம் இருந்தது. அதை கேட்டவுடன் நம் படத்திற்கு காளி என்று பெயர் வைக்கலாமே என்றார் விஜய்.

சந்தேகம்

சந்தேகம்

நான் ஒரு பெண் இயக்குனர் என்பதால் விஜய் ஆண்டனிக்கு என் திறமையின் மீது சந்தேகம் வந்ததே இல்லை. அவர் என் திறமை மீது முழு நம்பிக்கை வைத்து நடித்தார் என்கிறார் கிருத்திகா.

English summary
Kiruthiga Udhayanidhi said in an interview that her upcoming movie Kaali hero Vijay Antony never had doubt on her talent because she is a woman director. Kiruthiga is all praise for Vijay Antony.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil