“கமல் சார் தான் ரியல் ஹீரோ”: விக்ரம் படத்துக்கு நாகர்ஜுனா கொடுத்த சூப்பர் விமர்சனம் இதுதான்

சென்னை: ரன்பீர் கபூர் நடித்துள்ள 'பிரம்மாஸ்த்திரா' திரைப்படம் செப்டம்பர் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Recommended Video

Nagarjuna Speech |ராஜமௌலி என்னுடன் படம் பண்ணுவார் என்று நம்புகிறேன் | *Kollywood

அயன் முகர்ஜி இயக்கியுள்ள பிரம்மாஸ்த்திரா படத்தில் ரன்பீர் கபூருடன், நாகர்ஜுனா, அமிதாப்பச்சன், ஆலியாபட் ஆகியோர் நடித்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற பிரம்மாஸ்த்திரா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் கமல் குறித்து நாகர்ஜுன மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

பாலிவுட்டில் புதிய பிரம்மாண்டம்

பாலிவுட்டில் புதிய பிரம்மாண்டம்

அயன் முகர்ஜி இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள 'பிரம்மாஸ்த்திரா' படம், மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. செப்டம்பர் 9ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகும் பிரம்மாஸ்த்திரம் படத்தில், ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், ஆலியா பட், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்ஸன் ஜானரில் நெருப்பை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. .

சென்னையில் பிரம்மாஸ்த்திரம் ப்ரோமோஷன்

சென்னையில் பிரம்மாஸ்த்திரம் ப்ரோமோஷன்

பிரம்மாஸ்த்திரம் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ளதால், முக்கியமான நகரங்களில் இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், ரன்பீர் கபூர், நாகஜுனா இருவரும் பங்கேற்றனர். இவர்களுடன், தெலுங்கு முன்னணி இயக்குநர் ராஜமெளலியும் கலந்துகொண்டார்.

சென்னையை புகழ்ந்த நாகர்ஜுனா

சென்னையை புகழ்ந்த நாகர்ஜுனா

அப்போது பேசிய நாகர்ஜுனா, சென்னையைப் பற்றி வெகுவாக புகழ்ந்தார். "சென்னைக்கு வருவது சொந்த வீட்டுக்கு வருவதைப் போல நெகிழ்ச்சியாக இருக்கும். எப்பவுமே சென்னை எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல்" எனத் தெரிவித்தார். ராட்சசன், பயணம் தோழா என சிறப்பான படங்களில் நடித்துள்ளா நகார்ஜுனா, அமலாவை திருமணம் செய்துகொண்டார். இவரது மகனான நாக சைத்தன்யா, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

கமல் தான் ரியல் ஹீரோ

கமல் தான் ரியல் ஹீரோ

பிரம்மாஸ்த்திரம் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய நாகர்ஜூனா, நடிகர் கமல்ஹாசன் குறித்தும் மிகவும் உருக்கமாக கருத்து தெரிவித்தார். "கமல் சாரின் விக்ரம் திரைப்படம் பார்த்தேன், தமிழ் சினிமாவின் எல்லா வசூல் சாதனைகளையும் அடித்து நொறுக்கிவிட்ட விக்ரம், உண்மையாகவே சிறப்பான தரமான திரைப்படம். எனக்கு எப்போதுமே கமல் சாரை தான் ரொம்ப பிடிக்கும். அவர் தான் ரியல் ஹீரோ" என பேசினார். முன்னதாக நடிகர் அஜித் குறித்து ரன்பீர் கபூர் பேசிய காணொலி வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X