»   »  பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்று பேசினார்: அமலா பால் பரபரப்பு பேட்டி

பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்று பேசினார்: அமலா பால் பரபரப்பு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
அமலா பாலுக்கு பாலியல் தொல்லை குடுத்த தொழிலதிபர் கைது

சென்னை: தன்னை பாலியல் தொழிலுக்கு அழைப்பது(sexual trade) போன்று பேசியதால் தொழில் அதிபர் மீது போலீசில் புகார் அளித்ததாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அழகேசன் மீது நடிகை அமலா பால் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அழகேசனை கைது செய்துள்ளனர்.

இது குறித்து அமலா பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

டான்ஸ்

டான்ஸ்

மலேசியாவில் நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சிக்காக நான் நடன பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது ஒருவர் என்னிடம் வந்து என்னை பாலியல் ரீதியாக டிரேட் பண்ற மாதிரி பேசினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், வெட்கப்பட்டேன். அதனால் தான் போலீசில் புகார் கொடுத்தேன்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

நான் டான்ஸ் பயிற்சி செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து அந்த இவென்ட்டில் இருப்பது போன்று பேசினார். நான் தனியாக இருக்கும்போது பாலியல் ரீதியாக டிரேட் பண்ணுகிற மாதிரி பேசினார்.

யாரோ?

யாரோ?

நான் அங்கு இருக்கும் நேரம் அவருக்கு தெரிந்துள்ளது. அதை நினைத்து பயம் வந்துவிட்டது. நான் யாரையும் சார்ந்திராமல் வேலை பார்க்கும் பெண். யாரோ ஒருவர் அவருக்கு என்னை பற்றிய தகவல்களை கொடுத்துள்ளனர்.

ஸ்டுடியோ

ஸ்டுடியோ

தி. நகரில் உள்ள ஸ்ரீதர் மாஸ்டரின் ஸ்டுடியோவில் தான் இது நடந்தது. மாஸ்டர் அப்போது அங்கு இல்லை. இவென்ட்டில் உள்ள யாரோ தான் தகவல் கொடுத்திருக்கிறார்கள். போலீசார் மிகவும் உதவியாக உள்ளனர். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார் அமலா பால்.

English summary
Actress Amala Paul told the reporters that she filed a complaint against a businessman after he approached and talked about sexual trade. Police arrested the man and are investigating about the case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil