twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை கடத்தல் வழக்கு... சிறையில் உள்ள நடிகர் திலீப்புக்கு உடல்நிலை பாதிப்பு

    பிரபல நடிகை கடத்தல் வழக்கில் ஆலுவா சிறையில் உள்ள நடிகர் திலீப்புக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    By Lakshmi Priya
    |

    திருவனந்தபுரம்: பிரபல நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகர் திலீப்புக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பிரபல மலையாள நடிகை கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி கடத்தப்பட்டு, ஆறு நபர்களால் ஒரு கார் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப், கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவரது ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

    Health condition affected for Actor Dileep who is in prison

    பிரபல மலையாள நடிகை கடத்தல் வழக்கில் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது உடல்நிலையை பரிசோதிக்க வந்த மருத்துவர்கள், காதுகளின் உட்பகுதியில் உள்ள திரவத்தில் நிலையற்றதன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக அவருக்கு போதிய மருத்துவ வசதி அளித்தும், அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மேலும், சிறையில் வெறும் தரையில் பல நாட்கள் தூங்கியதாலும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அவரை மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளர் ஆலோசித்தாலும், பாதுகாப்பு கருதி அந்த முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடையும் நிலையில், அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் ராமன் பிள்ளை ஜாமீன் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Actor Dileep, who was arrested and sent to judicial custody in connection with abduction and assault of an actress, is not keeping well, it is learnt.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X