கொரோனா விதியை மீறிய கமல்… விளக்கம் கேட்ட சுகாதாரத்துறை செயலாளர் !
சென்னை : கொரோனா சிகிச்சை முடிந்து தனிமையில் இல்லாமல், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறித்து கமல்ஹாசன் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்று வந்த கமல் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, ஒரு வாரம் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

கொரோனா பாதிப்பு
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கடந்த 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

குணமடைந்தார்
அதன்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்த கமல் டிசம்பர் 4-ந்தேதி முதல் தனது வழக்கமான பணிகளை தொடர்வார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது.

தொகுத்து வழங்கினார்
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன, கமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடுக்கான, ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் செட்டில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஷூட் நடைபெற்றது.

கமல் விளக்கம் தரவேண்டும்
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா சிகிச்சை முடிந்தாலும் 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும், ஆனால், நடிகர் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து தனிமையில் இல்லாமல், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











